அமெரிக்காவில் அடங்க மறுக்கும் கொரோனா... 5 லட்சத்தை கடந்த உயிரிழப்பு!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.4 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.39 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா ஓர் ஆண்டை கடந்தும் உலக நாடுகளை ஆட்டம் காண வைத்து வருகிறது. மேலும்,. பல்வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா வேறு பரவி அச்சறுத்தி வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.4 கோடி பேராக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 24.39 லட்சமாகும். அது போல் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.48 கோடி பேராகும். அமெரிக்காவில் தொடந்து முதலிடத்தில் கொரோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு புதியதாக மேலும் 67,964 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு 28,449,812 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,135 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 502,142 ஆக அதிகரித்து உள்ளது. இங்கிலாந்தில் புதிதாக 12,718 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. மேலும் 738 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் புதிதாக 57,295 பேருக்கு பாதிப்பும், மேலும் 1,195 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 12,828 பேருக்கு பாதிப்பும், 467 பேர் இறந்தும் உள்ளனர்.
பிரான்சில் 25,018 பேருக்கும், இத்தாலியில் 12,074 பேருக்கும், துருக்கியில் 7,325 பேருக்கும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்று பாதிப்பில் உலகளவில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தொடர்ந்து பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் புதிதாக 12,440 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 89 பேர் இறந்துள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications