படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ்.. வெளியானது பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை
வாஷிங்டன்: போலீஸாரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியிருந்தது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
Recommended Video
இதுதொடர்பாக 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த மே 25-ஆம் தேதி சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு.
இவரை சாலையில் குப்புற படுக்க வைத்த போலீஸ் அதிகாரி பிளாய்டின் பின்னங்கழுத்தில் முட்டியால் வைத்து நெரித்தே படுகொலை செய்தார். இதையடுத்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஜார்ஜ்
ஹென்னபின் கவுண்டியின் மருத்துவ அதிகாரியால் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பிளாய்டிற்கு அடிப்படையிலேயே உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும் அவர் போதை பொருளை பயன்படுத்தியதாகவும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கழுத்தை நெரித்ததால்தான் அவர் இறந்தார் என்பதற்கு எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜ் குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர்.

இனப்படுகொலை
அதில் அவரது கழுத்து மற்றும் பின்கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிளாய்டின் கழுத்தில் அந்த அதிகாரி கால் வைத்து நெரித்ததால் மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டது. இதனால் இதயம் செயலிழந்து அவர் இறந்துவிட்டார். இது ஒரு இனப்படுகொலை என அறிக்கை வெளியானது.

ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா
இந்த நிலையில் ஜார்ஜின் குடும்பத்தினரின் அனுமதியுடன் ஹென்னபின் கவுண்டியின் மருத்துவ அதிகாரி மேற்கொண்ட பிரேத பரிசோதனை குறித்த முழு அறிக்கை தற்போது வெளியானது. அதில் ஏப்ரல் 3-ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று உறுதியானது. ஆனால் அவருக்கு எந்தவித அறிகுறியும் இருந்திருக்கவில்லை.

ஆரோக்கியம்
அவரது நுரையீரல்கள் ஆரோக்கியமாக இருந்துள்ளன. ஆனால் அவரது இதயத்தின் தமனிகளில் சில குறுகலாக இருந்துள்ளன என்று 20 பக்கங்களை கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடுப்பட்டுள்ளது. இதனிடையே ஜார்ஜை கொன்ற அதிகாரி மீது 3ஆவது டிகிரி கொலை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதை 2ஆவது டிகிரி கொலை வழக்காக மாற்றப்பட்டதோடு அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற 3 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications