அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேபோல் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அமெரிக்கா மட்டுமே மற்ற எல்லா நாடுகளையும் விட மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 11 கோடியே 49 லட்சத்து 78 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 25லட்சத்து 49 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 கோடியே 6லட்சத்து 87 ஆயிரம் பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் தற்போது 2 கோடியே 17 லட்சத்து 41 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

coronavirus cases is high in US, brazil, italy, russia and india

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 2 கோடியே 93லட்சத்து 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரு கோடியே 5லட்சத்து 89 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் 4,257,650 பேரும், இங்கிலாந்தில் 4,182,009 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 3,760,671 பேரும், ஸ்பெயினில் 3,204,531 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 49,923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த ஒரே நாளில் 38349 பேருக்கும். இத்தாலியில் 13114 பேருக்கும், ரஷ்யாவில் 11571 பேருக்கும், இந்தியாவில் 10930 பேருக்கும் நேற்று ஒரு நாளில் தொற்று உறுதியாகி உள்ளது.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1372 பேர் மரணம் அடைந்தனர். பிரேசிலில் 818 பேரும், மெக்ஸிகோவில் 458 பேரும், பிரான்சில் 375 பேரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+