குட் நியூஸ்.. வேகமாக குணமாகும் கொரோனா நோயாளிகள்.. ரெம்டெசிவிர் மருந்து தான் காரணம்! கசிந்த வீடியோ
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ரெம்டெசிவிர் (remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் விரைவாக குணமடைந்து வருகின்றனர், மிக சில நாட்களில் குணமடைந்து நோயாளிகள் வீட்டிற்குச் செல்வதாக கூறப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்தை வைத்து பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர்கள் , சோதனை குறித்த உரையாடும் வீடியோவை பெற்ற STAT நியூஸ் இந்த செய்தியை வெளிட்டிருக்கிறது.
Recommended Video
ஸ்டாட் வெளியிட்டுள்ள செய்தியில், ரெம்டெசிவிர் மருந்தை வைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் நோயாளிகளுக்கு கடுமையான சுவாச அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் இருந்தன, ஆனால் ஒரு வாரத்திற்கும் குறைவான சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையை விட்டு வெளியேற முடிந்திருக்கிறது. இந்த சோதனைக்கு தலைமை தாங்கிய மருத்துவர் வீடியோ ஒன்றில் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.
மருத்துவ பரிசோதனைக்கு தலைமை தாங்கும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் கேத்லீன் முல்லேன், வீடியோவில் கூறுகையில், "எங்கள் நோயாளிகளில் பெரும்பாலோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது மிகச் சிறந்த செய்தி, இது மிகச் சிறந்தது. எங்களுக்கு இரண்டு நோயாளிகள் மட்டுமே இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

முடிவு செய்ய முடியாது
எனினும் டாக்டர் முல்லானின் கருத்துக்கள் சோதனையின் பாதி தகவல்களை மட்டுமே கொண்டது என சிகாகோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. "நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனையின் பாதி தகவல் தான் என்றும் , இந்த தகவல்களை வைத்து முடிவு செய்ய முடியாது என்றும், சோதனை நடந்து வரும் சாத்தியமான சிகிச்சையின் பாதுகாப்பு அல்லது செயல்திறன் குறித்த முடிவுகளை இந்த தகவலை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது" என்றும் சிகாககோ பல்கலை அறிவுறுத்தியுள்ளது.

அங்கீகாரம் இல்லாமல்
மேலும் "இந்த தகவல் வெளியான விஷயத்தில், மருத்துவ ஆராய்ச்சியில் முன்னேற்றம் காண வேண்டிய பணிகள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்பாக சக ஆராய்ச்சியாளர்களுடன் உள்ளே பேசும் தவல்கள் அங்கீகாரம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில் எந்த ஒரு முடிவுக்கும் முன்கூட்டியே வருவது என்பது விஞ்ஞான ரீதியாக ஆதாரமற்றது என்றும் சிகாகோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் சோதனை
இப்போது புதிய விவாதத்திற்கு வழிவகுத்துள்ள உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவைரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை என்றும் எதுவும் இல்லை, இந்த நோய் எப்படி என்றால் சில நோயாளிகளுக்கு கடுமையான நிமோனியா மற்றும் கடுமையான சுவாசக்குழாய் தொற்றை ஏற்படுத்தும். இந்த நோய்க்கு அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பல மருந்துகள் மற்றும் பிற சிகிச்சைகளை சோதனை முறையில் செய்து வருகிறது. அவற்றில் ஒரு மருந்துதான் ரெமெடிவிர்.

கொரோனாவை தடுக்கும்
கிலியட் சயின்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, எபோலாவுக்கு எதிராக சிறிய வெற்றி பதிவு செய்தது, ஆனால் விலங்குகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இந்த மருந்தை கொரோனா வைரஸ்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும் என்பதைக் காட்டியது, இதில் SARS (கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி) மற்றும் MERS போன்ற நோய்களுக்கு எதிராக செயல்பட்டது- பிப்ரவரியில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், கோவிட் -19 க்கு எதிராக ரெம்டெசிவிர் செயல்பட்டது குறித்து தெரிவித்தது.

ரெம்டெசிவிர் மருந்து
இதற்கிடையே ஸ்டாட் செய்தி நிறுவனம் டாக்டர் முல்லேன் கடந்த வாரம் சக ஊழியர்களுடன் நடத்திய வீடியோ விவாதத்தின் நகலை பார்த்து வெளியிட்டசெய்தியில், அவர் வீடியோவில் "எங்கள் நோயாளிகளில் பெரும்பாலோர் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , அவர்களில் பெரும்பாலோர் ஆறு நாட்களில் வெளியேறுகிறார்கள், இதனால் சிகிச்சையின் கால அளவான 10 நாட்கள் இருக்க வேண்டியதில்லை" என்று கூறியிருக்கிறார்.

கிலியட் நிறுவனம் விளக்கம்
கொரோனாவை தடுக்க ரெம்டெசிவிர் மருந்துகளின் சோதனைகள் டஜன் கணக்கான பிற மருத்துவ மையங்களிலும் நடந்து வருகின்றன. உலகெங்கிலும் உள்ள 152 சோதனை தளங்களில் கடுமையான கோவிட் -19 அறிகுறிகளுடன் 2,400 நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதனையாக பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் து.. உலகெங்கிலும் உள்ள 169 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் மிதமான அறிகுறிகளுடன் 1,600 நோயாளிகளுக்கு இது மருந்து பரிசோதிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விசாரணையின் முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று ரெம்டெசிவிர் மருந்தை தயாரிகக்கு கிலியட் நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications