முக்கிய அறிவிப்பு.. புதிதாக 6 அறிகுறிகள் சேர்ப்பு.. இதில் ஒன்று இருந்தாலும் கொரோனா அட்டாக் கன்பார்ம்
வாஷிங்டன்: கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 வகையான புதிய அறிகுறிகளும் ஏற்படக் கூடும் என்று, நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சில வகை அறிகுறிகள் ஏற்படும் என்று, ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம், மற்றும் சிடிசி சில பட்டியலை வெளியிட்டிருந்தது.
இதுதவிர, அறிகுறி இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாகவும், தகவல் வெளியானது. இப்படியான நிலையில், நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய தகவல்
சி.டி.சி, முன்பு வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறி பட்டியலில், இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்றவை இருந்தன. ஆனால் இப்போது கூடுதலாக 6 வகை அறிகுறிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒரு அறிகுறி உங்களுக்கு இருந்தாலும், பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

6 அறிகுறிகள்
1) கடுமையான குளிர்
2) குளிருடன் உடல் நடுக்கம்
3) தசை வலி
4) தலைவலி
5) தொண்டை வலி
6) சுவை அல்லது வாசனை இழப்பை உணர்வது

எப்போது இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும்?
வைரஸ் உடலில் நுழைந்த 2-14 நாட்களுக்குப் பிறகு இந்த அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.டி.சி கொரோனா வைரஸின் அறிகுறிகளை பட்டியலிட்டிருந்தாலும், சில நோயாளிகள் அறிகுறியில்லாமலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே இந்த அறிகுறி இல்லாதவர்களும் பரிசோதனை நடத்துவது நல்லதுதான்.

உலகளவில் கொரோனா
உலகளவில், மொத்தம் 202,994 பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர். 193 நாடுகளில் அல்லது பிரதேசங்களில் இப்போது 2.9 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. 53,934 என்ற அளவில், அதிக இறப்புக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.
26,384 பேர் இறந்த நிலையில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்பெயின் 23,190, பிரான்ஸ் 22,614, பிரிட்டன் 20,319 கொரோனாவால் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications