இன்னும் சில வாரம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. இருண்ட காலம் இனி இல்லை- பிடனுக்கு ட்ரம்ப் பதிலடி
வாஷிங்டன்: இன்னும் சில வாரங்களில் கொரோனா வைரஸ் தடுப் பூசி வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் நடுவே இன்று விவாதம் நடைபெற்றது.

ஏற்கனவே, இவர்கள் இடையே கடந்த மாதம் 29ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் ஒரு நேரடி விவாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது விவாதம் ரத்தானது. ட்ரம்புக்கு கொரோனா ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று இருவரிடையே இன்று டென்னசிலுள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில் வாதம் நடைபெற்றது .
அப்போது ஜோ பிடன் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். இத்தனை அமெரிக்க மக்கள் இறப்பதற்கு அனுமதித்த ஒருவர் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக இருக்க முடியாது. நாம் ஒரு இருண்ட குளிர் காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஜோ பிடன் தெரிவித்தார்.
ட்ரம்ப் இதற்குப் பதிலடி கொடுத்து பேசினார். அவர் கூறுகையில், இருண்ட குளிர்காலம் வரப்போவது கிடையாது. நாம் இப்போதுதான் திருப்புமுனை கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஓடிப் போகப் போகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து நம்மிடம் இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் அது நடைமுறைக்கு வரும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மருந்து நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா வைரஸ் வேக்சின் அடுத்த ஆண்டுதான் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டிரம்ப் இன்னும் சில வாரங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications