பிரேசிலில் மோசமாகும் நிலைமை.. ஒரே நாளில் 89,200 பேருக்கு பாதிப்பு; 4,000-ஐ நெருங்கிய உயிரிழப்பு!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பிரேசிலில் கொரோனா தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 89,200 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,182 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 458 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகரிப்பு

கொரோனா அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 129,453,854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,827,422 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 104,400,367பேர் குணமடைந்துள்ளனர்.

பிரேசிலில் விஸ்வரூபம்

பிரேசிலில் விஸ்வரூபம்

அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 68,756 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 1,115 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சம் கண்டு வருகிறது. அங்கு ஒரே நாளில் 89,200 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,950 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவின் நிலை மோசம்

இந்தியாவின் நிலை மோசம்

இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 72,182 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 458 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 585,215 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 4,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 43 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியின் நிலை என்ன?

இத்தாலியின் நிலை என்ன?

பிரான்சில் 41,907 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 303 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 23,904 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 467 பேர் இறந்தனர். ரஷ்யாவில் புதிதாக 8,275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 408 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 8,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+