வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. இன்னும் கொரோனா எட்டிக் கூட பார்க்காத ஆரோக்கியமான நாடுகள்.. இதோ!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இன்னமும் சில நாடுகள் உள்ளன. இத்தகவலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹானில் டிசம்பரில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று நோயாக மாறி உள்ளது. இதுவரை உலகில் 39 லட்சத்து 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2லட்சத்து 70 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 13லட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.

covid 19 free countries in world

உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்காவில் 12லட்சத்து 92 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்னர். சுமார் 77 ஆயிரம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 2129 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த நோயால் இதுவரை 56 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

வெறும் 150 நாட்களுக்குள் உலகின் 200 நாடுகளில் கொரோனா தனது ஆதிக்கத்தை செலுத்தி உள்ள உள்ளது. ஆனால் இன்னமும்கூட சில நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் உள்ளன.

கொரோனா காலத்திலாவது ஜாதி, மதபிடிமானத்தை தளர்த்தி மனிதாபிதாமனத்தை வேர்பிடிக்க செய்யுங்ககொரோனா காலத்திலாவது ஜாதி, மதபிடிமானத்தை தளர்த்தி மனிதாபிதாமனத்தை வேர்பிடிக்க செய்யுங்க

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்துள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் 39 லட்சத்துக்கும் அதிமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2லட்சத்து 70 ஆயிரம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    World's First Coronavirus Vaccine Developed in Italy

    அந்த அறிக்கையில், கிரிபாடி, லெசோதோ, மார்ஷல் தீவு, மிக்ரோனே ஷியா, நவுரு, வடகொரியா, பலு, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கோ, துர்க்மெனிஷ்தான், துவாலு, வனாட்டு, குக் தீவுகள், மைக்ரோனேஷியாவின் கூட்டாட்சி நாடுகள், நியு மற்றும் பலாவ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    some countries haven’t reported any cases of COVID-19: Comoros, Lesotho, Turkmenistan, North Korea, Kiribati, Marshall Islands, Federated States of Micronesia, Samoa, Solomon Islands, Tonga, Tuvalu, Vanuatu, Cook Islands, Nauru, Niue and Palau.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X