வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம்.. ஆதாரம் இருக்கு.. அதிர வைத்த டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும் போது, கொரோனா வைரஸ் ஒரு சீன வைராலஜி ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று நம்புவதாகக் கூறினார், ஆனால் ஆதாரங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கொரோனா என்ற கொடிய நோயின் தோற்றம் குறித்து டிரம்ப் தெரிவித்த கருத்தால் சீனா அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

Recommended Video

    Trump says he has seen evidence that the virus started in Wuhan Lab

    உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைரலாஜி நிறுவனத்தில் உருவாகி இருக்கலாம் என்ற யூகத்தில் சில தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவியது. ஆனால் அப்போது அதை திட்டவட்டமாக சீனா மறுத்தது. கட்டுக்கதை என்று கூறியது.

    இதேநேரம் கொரோனா வைரஸ் வூஹானில் உள்ள வனவிலங்குகளை விற்கும் சந்தையில் இந்த வைரஸ் தோன்றியதாகவும், விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவியதாகவும் பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர். இதுவரை சீனா தெளிவாக கொரோனாவின் தோற்றம் குறித்து விளக்கம் அளித்தது இல்லை.

    உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை மோசம் உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை மோசம்

     சீனாவின் மீது கோபம்

    சீனாவின் மீது கோபம்

    தற்போது அமெரிக்காவில் பல்லாயிரம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துவிட்ட நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் சீனா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். ஒழுங்காக முன்பே எச்சரித்து இருந்தால் பல பேர் இறந்திருக்கமாட்டார்கள். உலகம் இவ்வளவு மோசமான இழப்பை சந்தித்து இருக்காது என்று சீனாவை தினசரி திட்டி தீர்த்து வருகிறார்கள். சீனாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் அமெரிக்கா கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் அந்நாட்டுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆதாரம் இருக்கிறது

    ஆதாரம் இருக்கிறது

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றை சீனா வூஹானில் உள்ள வைரலாஜி நிறுவனத்தில் உருவாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வூஹான் வைராலஜி நிறுவனத்தில் இருந்து கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என்று தான் அதிகமாக நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் உங்களுக்கு அதிக நம்பிக்கை அளிக்கும் அளவுக்கு ஆதாரத்தை கண்டீர்களா என்று கேட்டனர். அதற்கு டிரம்ப் "ஆமாம், ஆமாம் என்னிடம் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். "நான் அதை உங்களிடம் சொல்ல முடியாது. அதை உங்களுக்கு சொல்ல எனக்கு அனுமதி இல்லை." என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    தவறுதலாக வந்திருக்கலாம்

    தவறுதலாக வந்திருக்கலாம்

    சீனாவின் வைரலாஜி நிறுவனத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அத்தகைய சம்பவத்தின் போது தவறுதலாக உலகிற்கு பரவி இருக்கலாம் என்ற வசதியிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற கருத்தை உறுதிப்படுத்த டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால் சீன அரசின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனம் டிரம்பின் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ளது. தங்களை பற்றி அமெரிக்கா அதிகாரிகள் குறைவான மதிப்பிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    இருநாடுகளும் மாறி மாறி புகார்

    இருநாடுகளும் மாறி மாறி புகார்

    கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பெரும் பிளவுக்கு காரணாமாகி உள்ளது. இருநாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டி வருகின்றன. முன்னதாக சீனா, அமெரிக்க இராணுவம் கொரோனா வைரஸை சீனாவிற்கு கொண்டு வந்திருக்கலாம் என்று குற்றம்சாட்டியது. இதே போல் அமெரிக்க அதிபர் டிரம்ப், சரியான நேரத்தில் மற்றும் வெளிப்படையான முறையில் கொரோனா வைரஸ் அபாயங்கள் குறித்து உலகை எச்சரிக்க சீனா தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

    டிரம்ப் பதில் அளிக்க மறுப்பு

    டிரம்ப் பதில் அளிக்க மறுப்பு

    இதற்கிடையே சீனாவால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ அல்லது பரவவோ அனுமதிக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தோன்றுவது பற்றிய தவறான தகவல் என்று நீங்கள் கருதுவதற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை பொறுப்பேற்க சொல்வீர்களா என்று கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

    English summary
    US President Trump beleived that coronavirus may have originated in Chinese lab
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X