உலகில் கொரோனாவால் 31.06 கோடி பேர் பாதிப்பு - ஒரே நாளில் 19 லட்சம் பேருக்கு தொற்று!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,978,585 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 310,650,245 பேராக அதிகரித்துள்ளது.
உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.

கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா போய் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை தீவிரமடைய காரணாகியுள்ளது. அந்த வகையில் உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 1,978,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை 310,650,245 பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கொரோனாவில் இருந்து 26,883 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 260,507,004 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் ஒரே நாளில் 4,511 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,511,630 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 912 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 557,590 பேர் கொரோனாவால் பாதிப்பு. இதன் மூலம் கொரோனாவால் 62,414,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 42,478,003 பேர் மீண்டுள்ளனர். 19,074,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 912 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 861,185 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35,869,947 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 483,936 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 34,555,549.
பிரேசில் நாட்டில் மொத்தம் 22,558,695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 21,626,836 ஆகும். ரஷ்யாவில் கொரோனாவால் 1 கோடி பேரும் பிரான்ஸில் 1 கோடிக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யா உள்ளது.
உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள துருக்கியில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 10வது இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 103,776 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications