உலகில் கொரோனாவால் 41.57 கோடி பேர் பாதிப்பு - ஒரே நாளில் 1,891,846 பேருக்கு தொற்று பாதிப்பு!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1,891,846 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 415,769,485 பேராக அதிகரித்துள்ளது.
உலக மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.
கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா போய் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை தீவிரமடைய காரணாகியுள்ளது. அந்த வகையில் உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 1,891,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை 415,769,485 பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கொரோனாவில் இருந்து 2,671,658 குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 338,435,460 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 9,898 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,855,235 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ரஷ்யாவில் 683 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 87,934 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 79,622,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 50,405,867 பேர் மீண்டுள்ளனர். 28,267,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 2,055 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 948,787 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42,721,845 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 509,388 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 41,833,009.
பிரேசில் நாட்டில் மொத்தம் 27,664,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 24,252,534 ஆகும். ரஷ்யாவில் கொரோனாவால் 1 கோடி பேரும் பிரான்ஸில் 1 கோடிக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவுக்கு அடுத்து ஜெர்மனி உள்ளது.
உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ள துருக்கியில் 1 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 10வது இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.
கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 107,298 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications