உலகில் கொரோனாவால் 53.12 கோடி பேர் பாதிப்பு - ஒரு நாள் கேஸில் முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 438,664 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 531,352,910 பேராக அதிகரித்துள்ளது.
உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் டெல்டா கொரோனா பாதிப்பினால் தடுமாறி வருகின்றன.
கடந்த சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் டெல்டா போய் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை தீவிரமடைய காரணாகியுள்ளது. அந்த வகையில் உலகில் ஒரே நாளில் கொரோனாவால் 438,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை 531,352,910 பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கொரோனாவில் இருந்து 421,897 குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 501,785,512 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஒரே நாளில் 699 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,310,252 பேராக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ரஷ்யாவில் 86 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 11,595 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் 85,711,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 82,005,303 பேர் மீண்டுள்ளனர். 2,674,880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் 41 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,031,259 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தீவிரமடைவதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 43,151,889 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 516,574 பேராகும். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 42,609,335.
பிரேசில் நாட்டில் மொத்தம் 30,976,406 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பிரேசிலில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29,943,090 ஆகும். பிரிட்டனில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது. ஜெர்மனியில் 2 கோடியை நெருங்குகிறது. ரஷ்யாவில் கொரோனாவால் 1.7 கோடி பேரும் பிரான்ஸில் 2.9 கோடிக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து ஜெர்மனி உள்ளது. ஆஸ்திரேலியாவில் 32,810 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 10-வது இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.5 கோடியை கடந்துள்ளது. கொரோனா முதலில் உருவான சீனாவில் மீண்டும் பரவல் ஆரம்பித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 223,933 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இத்தனை நாள் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications