கொத்துக்கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. நிலைகுலைந்து போன அமெரிக்கா, மெக்ஸிகோ, இங்கிலாந்து!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 3,312 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மெக்ஸிகோவிலும், இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் ரஷ்யாவிலும் ஒரே நாளில் ஏராளமானோர் கொரோனாவால் பலியாகி உளளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 10 கோடியே 25லட்சத்து 79 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் இதுவரை 22லட்சத்து 14 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 7கோடியே 42 லட்சத்து 75 ஆயிரம் பேர் மீண்டனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 2கோடியே 60 லட்சத்து 85 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,64,99,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,07,27,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 91,19,477 பேரும், ரஷ்யாவில் கொரோனா தொற்றால் இதுவரை 38,13,048 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 37,72,813 பேரும், பிரான்சில் 31,53,487 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா முதலிடம்

அமெரிக்கா முதலிடம்

ஒரு நாள் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரே நாளில் அமெரிக்காவில் 157,217 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலில் 58,691 பேருக்கும், ஸ்பெயினில் 38,118 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா பாதித்துள்ளது. இங்கிலாந்தில் 29,079 பேருக்கும், பிரான்சில் 22,858 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
அமெரிக்காவில் அதிகம்

அமெரிக்காவில் அதிகம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 3,312 ஒரே நாளில் கொரோனாவால் மரணம் அடைந்தனர், மெக்ஸிகோவில் கொரோனாவால் ஒரே நாளில் 1506 பேர் பலியாகினர். இங்கிலாந்தில் 1245 பேரும், ஜெர்மனியில் 832 பேரும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 534 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 528 பேரும் ஒரு நாளில் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

நாடுகள் அதிர்ச்சி

நாடுகள் அதிர்ச்சி

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையிலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் கொரோனா பரவுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் கொஞ்சமும் குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது அந்ந நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+