ஒரு வயது குழந்தையின் வாயில் பெரிய ஓட்டை.. உற்று பார்த்து மெடிக்கல் மிராக்கிள் என அதிர்ந்த டாக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒருவயது குழந்தையின் வாயின் மேற்பகுதியில் பெரிய ஓட்டை இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சின்னஞ்சிறிய குழந்தைகள் தங்களுக்கு விவரம் தெரியும் வரை கீழே இருக்கும் பொருட்களை வாயில் வைப்பது வழக்கம். சில குழந்தைகள் சிறிய பொருட்களை விழுங்கவும் செய்வார்கள். இதனால் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் அவசியமானது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டேரியன் டீபிரிட்டா என்ற பெண் தனது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை செய்த குறும்புத்தனத்தையும் அதனால் ஏற்பட்ட பதற்றத்தையும் பேஸ்புக்கில் திகில் கதை போல் விவரித்துள்ளார்.

கருப்பு நிறம்

கருப்பு நிறம்

இதுகுறித்து டேரியன் டீபிரிட்டாவின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த 31-ஆம் தேதி வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது: நான் என் குழந்தை பெல்லாவுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவளது மேற்பகுதியில் உள்ள வாயில் ஏதோ கருப்பு நிறத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

துடைத்தேன்

துடைத்தேன்

கையை விட்டு எடுத்து பார்த்தேன் எதுவும் வரவில்லை. உடனே அச்சமடைந்த நான் எனது தாய் சாண்ட்லரை வரவழைத்தேன். இதனிடையே மருத்துவரின் அப்பாயின்ட்மென்ட்டையும் வாங்கி விட்டேன். பின்னர் என் அம்மாவுடன் எனது குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த செவிலியரும் துடைத்து பார்த்தார் ஒன்று வரவில்லை.

பார்க்கவில்லை

பார்க்கவில்லை

இதையடுத்து இது பிறந்த போதிலிருந்தே இக்குழந்தைக்கு அடையாளம் இருந்திருக்கலாம் என செவிலியர் தெரிவித்தார். ஆனால் நானோ தினமும் எனது குழந்தையின் வாயை துடைத்து வருவதால் இது போன்ற அடையாளத்தை அவர் பிறந்ததிலிருந்து நான் பார்த்ததில்லை என்றேன்.

மேல்வாயில்

மேல்வாயில்

உடனே அவரும் என் குழந்தையை சோதிக்க இரு மருத்துவர்களை வரவழைத்தார். மருத்துவர்களோ இது மெடிக்கல் மிராக்கிள் என தெரிவித்தார். ஆனால் நானோ அந்த கருப்பு பகுதியின் ஓரத்தில் வெள்ளையாக காகிதம் போல் இருப்பதை கண்டேன். உடனே அவள் எதையோ விழுங்க நினைத்த போது மேல்வாயில் ஓட்டிக் கொண்டதை அறிந்தேன்.

அட்டை பெட்டியை விழுங்கிய பெல்லா

அட்டை பெட்டியை விழுங்கிய பெல்லா

பின்னர் அதை சுரண்டி எடுத்த போதுதான் தெரிந்தது அட்டை பெட்டியின் ஒரு பீஸை வாயில் போட்டபோது அது ஓட்டிக் கொண்டது என்பது. ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்ததை நினைத்து என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாததை நான் கண்டுபிடித்துவிட்டேன். என் மகள் பெல்லாவுக்கு தரையில் கிடக்கும் பொருட்களை வாயில் போடும் பழக்கம் உள்ளது என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+