ஐஸ்க்குள் கருப்பா நீளமாக கிடந்த உருவம்! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்! நெட்டிசன்களை உலுக்கிய சம்பவம்
வாஷிங்டன்: ஆசை ஆசையாய் ஐஸ் வாங்கி சாப்பிட நினைத்த நபர், அந்த ஐஸ்க்குள் இறந்த நிலையில் பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இனி ஐஸ் வாங்கி சாப்பிட நினைத்தாலே இந்த நியாபகம் தானே வரும் என்று கலங்கிப்போய் உள்ளார். தாய்லாந்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் பரவி வருகிறது.
ஐஸ் என்றாலே பலருக்கும் பிடிக்கும். அப்படித்தான் குச்சி ஐசை வாங்கி சாப்பிட நினைத்தார் தாய்லாந்து நபர். ஆனால் அவருக்கு கிடைத்த ஐஸ்கிரீமில் பாம்பு இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். குச்சி ஐஸ்க்குள் முழு பாம்பு ஒன்று இறந்த நிலையில், இருந்ததை பார்த்து ஐஸ்கிரிம் வாங்கியவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் இணையத்தை உலுக்கியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

தாய்லாந்தின் மத்திய பகுதியை சேர்ந்தவர் ரேபன் நக்லேங்பூன். இவர் அங்குள்ள பாக் தோ என்ற இடத்தில் சாலையோர கடை ஒன்றில் குச்சி ஐஸ் வாங்கியுள்ளார். வெயிலின் தாக்கம் வேற அதிகமாக இருந்ததால் குச்சி ஐஸை ஆசை ஆசையாக சாப்பிட போனவருக்கு குச்சி ஐசில் வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக தெரிந்துள்ளது. இதனால் ஒரு நிமிடம் சுதாரித்த அவர் குச்சி ஐசை உற்று பார்த்த போதுதான் பேரதிர்ச்சி காத்திருந்தது.
இணையத்தில் பரவும் புகைப்படம்
அதாவது, ஐஸ்கிரீமிற்குள் பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரேபன், உடனடியாக அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இந்த புகைப்படத்தை பதிவிட்ட ரேபன், "இது உண்மையாகவே இறந்து விட்டதா?.. எவ்வளவு பெரிய கண்கள்.. இது உண்மையான புகைப்படம்.. ஏனென்றால் இந்த ஐஸ் வாங்கியதே நான் தான்" என்று பதிவிட்டுள்ளர். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது ரொம்பவே அதிரச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
உணவு பாதுகாப்பு பிரச்சினையாகவே உள்ளது
நெட்டிசன் ஒருவர் கூறும் போது, "உண்மையில் இதை பார்க்கும் போதே குமட்டல் வருகிறது. ஐஸ்கீரிமை இனி வாங்கினால் கூட அச்சம் ஏற்படும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "இனி நான் ஒருபோதும் சாலையோர வியாபாரியிடம் இருந்து ஐஸ்கிரீம் வாங்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'இதெல்லாம் எப்படி நடக்கிறது. ஐஸ்களை தயாரிக்கும் போது உரிய முறையில் செக் செய்ய மாட்டார்களா..' என்று கேட்டுள்ளார்.
சில நெட்டிசன்கள் ஜாலியாகவும் பதிவிட தவறவில்லை. அந்த வகையில் ஜாலியாக பதிவிட்டு இருக்கும் நெட்டிசன் ஒருவர், "வாழ்த்துக்கள்.. ஐஸ்கிரீமின் வைல்டு வெர்ஷனை நீங்கள்தான் வாங்கியுள்ளீர்கள்" என்று கூறியுள்ளார். சில நெட்டிசன்கள், இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுக்கவே உணவு பாதுகாப்பு என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இதில் அரசுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications