வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பெரும் சோகம்.. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33000த்தை தாண்டியது!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 1283 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,871 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    கொரோனாவின் பிடியில் அமெரிக்கா...தாக்கம் குறைய வாய்ப்பு உண்டா?

    உலகையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 2134971 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் 48540 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 143110 பேர் உலகம்முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

    உலகிலேயே மிக அதிபட்சமான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மற்றும் நோய் பரவல் வேகம் ஆகியவை அமெரிக்காவில் தான் உள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவை கடுமையாக சிதைத்துள்ளது.

    11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

    11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

    இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 6,59,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 11,071 பேர் பாதிக்கப்பட்டனர். அமெரிக்கா முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாளில் (தற்போது வரை) 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33,871 ஆக உயர்ந்துள்ளது.

    13000 பேர் கவலைக்கிடம்

    13000 பேர் கவலைக்கிடம்

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 57,189 பேர் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அமெரிக்காவில் 5,68,159 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 13,369 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 3,3,18,232 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே ஒரு நாடு எடுத்த அதிகபட்ச கொரோனா பரிசோதனை ஆகும்.

    16ஆயிரம் உயிரிழப்பு

    16ஆயிரம் உயிரிழப்பு

    அமெரிக்காவிலேயே நியூயார்க் மாகாணம் தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரு நாளில் மட்டும் 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நியூயார்க்கில் 16,251 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,26,343 பேர் இது வரை அங்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 7636 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிக பாதிப்பு

    அதிக பாதிப்பு

    அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை 22,130 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரை 1,1,78,403 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 1,68,941 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    The confirmed coronavirus death toll in the United States surpassed 33,000 on Thursday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X