டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது அவரது உண்மையான மனைவி கிடையாதாம்! ஷாக் தகவல்
வாஷிங்டன்: டிரம்ப் கடந்த 20ம் தேதி அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். ஆனால் இந்த விழாவில் பங்கேற்றிருந்த அவரது மனைவி மெலனியா, பெரிய தொப்பியை அணிந்து, அவரது முகத்தை மறைத்திருந்தார். இது குறித்து சோஷியல் மீடியாக்களில் விவாதங்கள் வெடித்திருக்கின்றன. விழாவில் பங்கேற்றது மெலனியாவின் க்ளோன் என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாட்டின் அதிபருடைய மனைவி, ஏன் தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு, தனது கணவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார் என்பது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதமாக கிளம்பியிருக்கிறது. பலரும் பல்வேறு காரணங்களை சொல்கிறார்கள். குறிப்பாக 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது.

1. உடல்நலக்குறைவு காரணமாக ஏற்பட்ட வாய் துர்நாற்ற பிரச்சனை
2. விழாவில் பங்கேற்றது போலியான மெலனியா டிரம்ப்
3. தன்னுடைய உணர்வுகளை மறைப்பதற்காக
4. நிஜமான பேஷன் நோக்கங்களுக்காக
இதில் முதல் விவாதத்தின்படி, மெலனியா டிரம்ப் உடல்நல பாதிப்பை சந்தித்திருக்கலாம். அதனால் அவருடைய வாய் துர்நாற்றம் மிக்கதாக மாறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்கிற காரணத்தால் மெலனியா, பெரிய தொப்பியை அணிந்து வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நடைமுறைக்கு ஆங்கிலத்தில் The "Bad Breath" Theory என்று பெயர்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் டிரம்ப், மனைவி மெலனியாவுக்கு முத்தமிட முயன்றார். ஆனால் தொப்பி அவரை தடுத்தது. பதிலுக்கு மெலனியா, தொப்பியை கழற்றவோ, சரி செய்து டிரம்ப்பை முத்தமிடவோ முன்வரவில்லை. கடைசியில் வேறு வழியின்றி, வெறும் காற்றில் டிரம்ப் முத்தமிட்டிருந்தார். எனவேதான் நெட்டிசன்கள் மெலனியாவின் நடவடிக்கைக்கு The "Bad Breath" Theory-ஐ காரணமாக கூறுகின்றனர்.
இரண்டாவதாக நெட்டிசன்கள் அதிகம் கூறும் கருத்து, விழாவில் பங்கேற்றிருந்தது உண்மையான மெலனியாவே கிடையாது என்பதுதான். உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள், பிரசித்திப்பெற்ற நபர்கள் தங்களுக்கான க்ளோனை உருவாக்கி வைத்திருப்பார்கள் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழாவில் பங்கேற்றிருந்தது க்ளோன் மெலனியா என்று சொல்லப்படுகிறது. உண்மையான மெலனியாவுக்கும், விழாவில் பங்கேற்றவருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.
விழாவில் பங்கேற்ற மெலனியாவின் தாடையும், காது மடல்களும் வித்தியாசமாக இருந்ததாகவும் அவர்கள் தங்கள் கருத்துக்கு காரணம் கூறுகின்றனர்.
மூன்றாவது காரணம், கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் பதவியேற்றபோது, மெலனியா வெளிப்படுத்தியிருந்த முக பாவனைகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. எனவே இந்த முறையும் இதுபோன்ற விமர்சனங்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்பதால், மெலனியா தனது முகத்தை பெரிய தொப்பி வைத்து மறைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலரோ, இது வெறும் பேஷன் உடைதான். நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் எதுவும் கிடையாது. தன்னை எளிமையாகவும், அதே நேரம் அறிமுகமில்லாதவர்கள் தன்னை நெருங்குவதையும் தவிர்க்க பிரபலங்கள் இதுபோன்ற பெரிய தொப்பியை அணிவது வழக்கம்தான். அந்த நோக்கத்தில்தான் மெலனியாவும் இதை அணிந்திருந்தார் என்று கூறுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே.. விழாவில் பங்கேற்றிருந்தது உண்மையான மெலனியாதானா?












Click it and Unblock the Notifications