'இது விடாது போல இருக்கே..' கழுதைப்புலிகளுக்கு பரவிய கொரோனாவால் மிரளும் ஆய்வாளர்கள்.. ஏன் ஆபத்தானது
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் 2 கழுதைப்புலிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அதைச் சமாளிப்பதில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயூதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ்
அதேநேரம் விலங்குகள் மத்தியில் கொரோனா பரவுவதும் அதிகரித்துள்ளது. வண்டலூர் பூங்கா தொடங்கி உலகம் முழுவதும் பல்வேறு உயிரியல் பூங்காக்களிலும் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், முதல்முறையாக அமெரிக்காவில் கழுதைப்புலிகளுக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொரோனா எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

கழுதைப்புலிகள்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் பல சிங்கங்களுக்கு திடீரென உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலகில் கழுதைப்புலிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஏன் முக்கியம்
இது தொடர்பாக டென்வர் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழுதைப்புலிகளின் எதிர்ப்பு ஆற்றல் மிக மிக வலிமையானது. ஆந்த்ராக்ஸ், ரேபிஸ் மற்றும் டிஸ்டெம்பர் போன்ற ஆபத்தான நோய்கள் கூட கழுதைப்புலிகளுக்கு அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இருப்பினும் தற்போது 2 கழுதைப்புலிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு பரவும் ஆபத்துகள் அதிகம். எனவே அதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை
சர்வதேச அளவில் இதுவரை பல்வேறு விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் மனிதர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கும் விலங்குகளுக்கே வைரஸ் பாதிப்பு எளிதில் ஏற்படுகிறது. விலங்குகளுக்கு வைரஸ் பரவும் ஆபத்து இருந்தாலும் கூட அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு தான். இருப்பினும், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், தங்கள் செல்ல பிராணிகளுடன் நெருக்கத்துடன் இருக்க வேண்டாம் என அமெரிக்காவின் தேசிய கால்நடை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

விலங்குகள் தடுப்பூசி
மனிதர்களுக்கு எப்படி கொரோனா வேக்சின் போடப்படுகிறதோ, அதேபோல செல்லப்பிராணிகளுக்கு எனத் தனியாக கொரோனா வேக்சின் உள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த Carnivac-Cov வேக்சின், விலங்குகளிடம் ஏற்படும் கொரோனா பாதிப்பைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மனிதர்களுக்கு வேக்சின் போடும் பணிகளே இன்னும் முடியாத நிலையில், செல்லப் பிராணிகளுக்கு வேக்சின் என்பது அதிக முக்கியத்துவம் பெறவில்லை.
-
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இரவோடு இரவாக பொழிந்த குண்டு மழை.. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் போது டிரம்ப் தாக்குதல்.. பதற்றம் -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
இன்னும் சில மணி நேரத்தில் நல்ல செய்தி.. டெல்லியில் நின்றபடி அமெரிக்கா அதிரடி! கவனிக்கும் உலக நாடுகள் -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்!












Click it and Unblock the Notifications