அங்க சுத்தி இங்க சுத்தி கடைசி துணை அதிபரிடம் வரும் டிரம்ப்... முடிவுகளை மாற்ற அடிபணிவாரா பென்ஸ்
வாஷிங்டன்: அதிபர் டிரம்பின் தொடர் அழுத்தம் இருந்தாலும்கூட அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றத் துணை அதிபர் மைக் பென்ஸ் முயலமாட்டார் என்று அவரது ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிபர் டிரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறங்கினார்.
இத்தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார்.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப்
இருப்பினும், இத்தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றுள்ளதால் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகிறார். இது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து வழக்குகளிலும் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

எம்பிகள் திட்டம்
அமெரிக்கத் தேர்தல் விதிமுறைகளின்படி ஒவ்வொரு மாகாண அரசும் யார் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து சான்றிதழை அந்நாட்டு நாடாளுமன்றத்திடம் அளிக்கும். இன்று (ஜனவரி 6) அந்த சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு, அதன்படி எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் ஒன்றுகூடி புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த நிகழ்வில்தான் டிரம்ப் ஆதரவு எம்பிகள் பைடனின் வெற்றிக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவுள்ளனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் இதனால் எந்த தாக்கமும் இருக்காது.

துணை அதிபருக்கு அழுத்தம்
இதனால் டிரம்பின் அடுத்த பார்வை துணை அதிபர் மைக் பென்ஸை நோக்கித் திரும்பியுள்ளது. ஏனென்றால், இன்று கூடும் நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் முடிவுகள் சான்றிதழ்களைத் துணை அதிபர் மைக் பென்ஸ் தான் உறுதி செய்வார். இந்த இடத்தில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, ஜனநாயக கட்சி வென்ற சில மாகாணங்களைச் சேர்ந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் மைக் பென்ஸுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அவர் மட்டும் இதை செய்யல
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், "இந்த விஷயத்தில் செயல்படத் துணை அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்பதில் நானும் பென்ஸும் உறுதியாக உள்ளோம். அமெரிக்காவின் அரசியலமைப்பின் கீழ் துணை அதிபருக்கு இதுபோல பல அதிகாரங்கள் உள்ளன. மாகாண தேர்தல் முடிவுகளை ரத்து செய்யவும் செல்லாது என்றும் அறிவிக்கவும் அவரால் முடியும். அவர் இதைச் செய்யவில்லை என்றால், எனக்குப் பிடிக்காத நபராக அவர் ஆகிவிடுவார். டிரம்ப் இவ்வாறு தொடர்ந்து வலியுறுத்தி வருவது, பைக் பென்ஸ் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

என்ன செய்யப்போகிறார்
இருப்பினும், டிரம்பின் வலியுறுத்தல்களுக்கு மைக் பென்ஸ் கட்டுப்பட மாட்டார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளனர். அவர் அதிபருக்கு ஆதரவாக இருப்பார் என்றாலும்கூட இறுதியில் அரசியலமைப்பின்படியே அவர் செயல்படுவார் என்று துணை அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் கூறினார். இது குறித்து துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில், "இது வெறும் சம்பிரதாய நடைமுறை. மாகாண அரசுகள் அனுப்பியுள்ள தேர்தல் முடிவு சான்றிதழ்களை கவரில் இருந்து எடுத்துப் படிக்க வேண்டும்,அவ்வளவுதான்" என்றார். எனவே, தேர்தல் முடிவுகளை மாற்றுவதில் தலையிடக் கூடாது என்பதில் மைக் பென்ஸ் உறுதியாக உள்ளதால் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications