கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு..எரிபொருள் விலை உயர வாய்ப்பு?
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன.
உலக அளவில் பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது கச்சா எண்ணெய்.
கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதனால், நாடுகளில் பொருளாதார அளவிலும் இது கடுமையாக எதிரொலிக்கும்.

உற்பத்தியை குறைக்க முடிவு
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 13 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த ஒபெக் + கூட்டமைப்பில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள நாடான சவுதி அரேபியா , தினசரி க்ச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே
ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்திற்கு மத்தியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்த நிலையிலும் அதையும் மீறி உற்பத்தியை குறைக்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. வரும் மே மாதம் முதல் நடப்பு ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இருப்பதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.

10.23 லட்சம் பீப்பாயாக குறைய உள்ளது
ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இதன்படி, ஈரான் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை 2,11,000 ஆகவும் குவைத் 1,28,000 பீப்பாய் ஆகவும் ஓமன் 40 ஆயிரம் மற்றும் யூஏஇ 1.44 லட்சம் பிப்பாய் ஆகவும் குறைக்க முடிவு செய்துள்ளது. ஓபெக் நாடுகளின் இந்த முடிவால், இந்தக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் கச்சா எண்னெய் அளவு 10.23 லட்சம் பீப்பாயாக குறைய உள்ளது.

இதுவே முதல் முறையாகும்
ரஷ்யாவும் கச்ச எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கச்சா எண்ணெய் மார்க்கெட்டில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் தேவை உயரும்
பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும் என்று உலக நடுகள் கவலை தெரிவித்த நிலையிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் தேவை உயரும் என்றும் இதனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயரும்?
எனினும், அதையும் மீறி உற்பத்தியை குறைப்பதாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் அறிவித்துள்ளன. கச்சா எண்ணய் உற்பத்தி குறைப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!












Click it and Unblock the Notifications