வானில் நடக்கும் பேரதிசயம்! "அரிய நட்சத்திரம்" மிஸ் பண்ணிடாதீங்க.. இனி 2095-ல் தான் பார்க்க முடியும்
வாஷிங்டன்: வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வாக, Pons-Brooks என்ற நட்சத்திரம் பூமியை கடந்து செல்கிறது. மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத துவக்கம் வரை இந்த வால் நட்சத்திரத்தை நன்கு பார்க்க முடியும். இதை மிஸ் செய்தால், 2095 ஆம் ஆண்டில் தான் பார்க்க முடியுமாம்.
கற்பனைக்கும் எட்டாத பேரதிசயங்கள் வானில் நடைபெற்று வருகின்றன. பிரபஞ்சத்தில் மனிதனால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு வானியல் மாற்றங்கள் தினம்தோறும் நடந்து கொண்டிருந்தன. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகியவையும் இந்த பட்டியலில் தான் அடங்குகிறது.

இந்த நிலையில்தான், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய அரிய நிகழ்வு வானில் நடைபெற்றுள்ளது. Pons-Brooks என்ற நட்சத்திரம் பூமியை கடந்து செல்கிறது. சூரிய குடும்பத்திற்குள் உள்பகுதியில் இந்த நட்சத்திரம் கடந்து செல்வது 70 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
வெறும் கண்ணாலே பார்க்க முடியும்: மதர் ஆஃப் டிராகன்ஸ் என்று அழைக்கப்படும் நட்சத்திரம் இனி 2095 ஆம் ஆண்டில் தான் பூமியில் இருந்து தென்படுமாம். தற்போது பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் இந்த நட்சத்திரம் சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டதாம். இந்த நட்சத்திரம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியாதவது: " இந்த நட்சத்திரத்தை வெறும் கண்ணாலே பார்க்க முடியும்.
கொம்பு வடிவத்தில்: எனினும், சிறிய ரக ஸ்பைனாகுலர்கள் இருந்தால் ஈசியாக பார்க்கலாம். மேற்கு அடிவானத்தில் இந்த நட்சத்திரம் தென்படும். கொம்பு வடிவத்தில் இந்த வால் நட்சத்திரம் இருக்கும். இதனால் இந்த வால் நட்சத்திரத்திற்கு டெவில் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வால்நட்சத்திரம் பனிகளால் நிறைந்தது.
தூசுகள், கடினமான பாறைகளும் உள்ள வால் நட்சத்திரம் சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது.இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்கும் போது, சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பத்தால் அதில் உள்ள பனிகள் உருகி தூசுகளை வெளிப்படுத்தும். அப்போது வால்நட்சத்திரம் மிளிரும். சூரிய காற்றின் காரணமாக சூரியனிடம் இருந்து விலகி செல்லும் போது, நட்சத்திரத்தின் பின்னால் வால் போன்ற தோற்றம் உருவாகும்.
எப்போது பார்க்க முடியும்?: மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத துவக்கம் வரை இந்த வால் நட்சத்திரத்தை நன்கு பார்க்க முடியும். இந்த கால கட்டத்தில் தெளிவான வானத்தில் அந்தி சாயும் நேரத்தில் மேற்கு அடிவானத்தில் கண்ணுக்கு புலப்படும்" என்றனர். வடக்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகளான ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் இரவு நேரத்தில் வெறும் கண்களால் எளிதாக தெரியும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications