அமெரிக்க அதிபர் பதவியேற்பு, தொடக்க விழா வித்தியாசம் தெரியுமா?.. 40 வருட சென்டிமென்டை உடைத்த டிரம்ப்
வாஷிங்டன் டிசி: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா எந்தளவுக்கு கவனிக்கப்படுமோ, அதேபோல அதிபர் பதவிக்காக நடத்தப்படும் தொடக்க விழாவும் அங்கு மிகவும் பிரபலம். இந்நிலையில் 40 ஆண்டுகளில் முதல்முறையாக தொடக்க விழாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். அதிபருக்கான பதவியேற்புடன் அதையொட்டி நடைபெறும் தொடக்க விழா (inauguration ) அங்கு மிகவும் பிரபலம்.

கொண்டாட்டம், பார்டி, மக்கள் கூட்டம் என்று அந்த தொடக்க விழா ஒளிபரப்பை எந்த மக்களும் மிஸ் செய்யாமல் பார்ப்பார்கள். சிலருக்கு இந்த தொடக்க விழாவுக்கும், பதவியேற்புக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிவிடுவார்கள். இரண்டும் அதிபர் பதவி சம்பந்தப்பட்டது என்றாலும் அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அதிபர் பதவியேற்புக்கு முன்னோட்டமாக சம்பிரதாயத்துக்கு நடைபெறுவதுதான் இந்த தொடக்க விழா.. அதாவது இனாக்ரேஸன் என்பார்கள். இந்த வழக்கம் லத்தினில் இருந்து வந்தது. முதல்முறையாக ஆங்கிலேயேர்கள் காலத்தில் தான் (1595-1605) இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் அமெரிக்க அதிபர்களுக்காக நடத்தப்படும் நிகழ்வு மட்டுமல்ல. பல விஷயங்களுக்கு சம்பிரதாயத்துக்காக நடத்தப்படுவதை போலவே அமெரிக்க அதிபர் பதவியேற்புக்கு முன்னதாக இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றாலும், பதவியேற்புக்கு முன்பு வரை அவர் அதிகாரபூர்வமான அதிபராக கருதப்பட மாட்டார். 1985 ஆம் ஆண்டு ரொனால்ட் ரேகன் அமெரிக்க அதிபராக பதவியேற்பது முதல் அந்த தொடக்க விழா வெள்ளை மாளிகைக்கு வெளியில் தான் நடைபெறும்.
அதேநேரத்தில் பதவி ஏற்பு விழா வெள்ளை மாளிகைக்கு உள்ளே நடைபெறும். அமெரிக்காவில் நிகழும் கடும் குளிர் காரணமாக 40 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தாண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் உள்ளே வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். 20 ஆம் தேதி அதிகாலை தொடக்க விழாவும், அதன் பிறகு நண்பகல் 12 மணியளவில் டிரம்ப் அதிபராக பதவியேற்பு நிகழ்வும் நடைறவுள்ளது.
பொதுவாக தொடக்க விழா என்பது முன்பு மார்ச் 4 ஆம் தேதி தான் நடத்தப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு மார்ச் மாதம் தொடக்க விழா என்பது கால இடைவெளி அதிகம் இருப்பதால், அதை மாற்றி ஜனவரி 20 ஆம் தேதி தொடக்க விழா நடத்துகிறார்கள். ஒருவேளை ஜனவரி 20 ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஜனவரி 21 ஆம் தேதி தொடக்க விழா நடைபெறும் வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளனர்.
புதிய தொடக்கத்தை கொண்டாடும் நிகழ்வுதான் தொடக்க விழா. இதற்கு பிறகு வெள்ளை மாளிகைக்குள் பதவியேற்பு விழா நடைபெறும். பதவியேற்பு என்பது தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு அதிகாரபூர்வமாக அதிபராக பதவி பிரமாணம் செய்து வைப்பதாகும்.
அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் டிரம்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதன் பிறகு தேசிய கீதம் பாடி, 21 குண்டுகள் முழங்க புதிய அதிபருக்கு வரவேற்பு செலுத்தப்படும். இறுதியாக புதிய அதிபர் உரையாற்றுவார்.












Click it and Unblock the Notifications