"டர்ட்டி இந்து.!" அமெரிக்காவில் மீண்டும் வெடித்த சர்ச்சை! இந்தியரை இனரீதியாக சாடிய மற்றொரு இந்தியர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு இந்தியர்கள் இன ரீதியாக அவமதிக்கும் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது அதேபோல மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சமீப ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஐடி போன்ற துறைகளில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அவர்களால் எளிதாக சென்று செட்டில் ஆக முடிகிறது.

அமெரிக்கா

அமெரிக்கா

இப்படி வெளிநாடுகளில் இருந்து செட்டில் ஆகும் நபர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு நபர்கள் குறைந்த ஊதியத்தில் வேலைக்கு வருவதால் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அதிகம் செட்டிலாகும் இனக்குழுக்களில் ஒன்றாக இந்தியர்கள் இருப்பதால், இந்தியர்கள் மீது அங்குள்ளவர்களுக்குக் கோபம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அவமதிப்பு

அவமதிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், மெக்சிகோ நாட்டை சேர்ந்த பெண் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை மிக மோசமாக வசைபாடியிருந்தார். இதற்காக டெக்சாஸ் போலீசார் அந்த பெண்ணை கைது செய்து இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது அமெரிக்காவில் நடந்த மற்றொரு சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 டர்ட்டி இந்து

டர்ட்டி இந்து

அதில் இந்திய அமெரிக்கர் ஒருவரே மற்றொரு இந்தியர் மீது இன ரீதியாகத் தாக்கி பேசுகிறார். இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கலிஃபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 37 வயதான தேஜிந்தர் சிங் என்பவர் கிருஷ்ணன் ஜெயராமன் என்பவரை "டர்ட்டி இந்து" என்று திட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கேவலமானவர்கள்

கேவலமானவர்கள்

ஜெயராமன் மீது தேஜிந்தர் சிங் எச்சிலும் துப்பியதாகக் கூறப்படுகிறது. ஜெயராமன் இந்து என்பதற்காக அவரை இப்படியெல்லாம் திட்டியுள்ளார். "இந்துக்களாகிய நீங்கள் கேவலமானவர்கள்" எனச் சாடியுள்ளார். மேலும், பல வசைச் சொற்களையும் தேஜிந்தர் சிங் சொல்வதும் அந்த வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. ஜெயராமனைக் கேவலமானவர் என்றும் திரும்பத் திரும்பக் கூறுவதையும் நீ இந்தியரே இல்லை எனச் சொல்வதும் அதில் கேட்கிறது.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

தன்னை அவமரியாதையாக நடத்தியவரும் இந்தியர் என்பதால் ஜெயராமனும் கோபப்பட்டுள்ளார். இருப்பினும், எங்கு தேஜிந்தர் தன்னை பின்தொடர்ந்து வந்து தாக்குவாரோ என்று அஞ்சி அவர் போலீசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் ஃப்ரீமாண்ட் காவல்துறை, தேஜிந்தர் சிங் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரித்த வரும் போலீசார், வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளது.

கண்டனம்

கண்டனம்

இந்தச் சம்பவத்தை அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரும் கடுமையாகக் கண்டித்து உள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க ஹவுஸ் பிரதிநிதி ரோஹித் கண்ணா, இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார். "இந்துக்கள் மீதான வெறுப்பு உட்பட அனைத்து வகையான பாகுபாடுகளையும் நாம் கண்டிக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரே இந்தியரைத் திட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+