மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி மரணம்.. 6 மாதத்திற்கு பிறகு விலகிய மர்மம்.. நடந்தது என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது குடல் பகுதியில் ஏற்பட்ட உள்காயங்களால் அவர் உயிரிழந்தது 6 மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.
பிரபல பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் மகளும் மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா பிரஸ்லி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இவருடைய முன்னாள் கணவர் டேனி கியோஃபும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லிசாவுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தார்.

அப்போதுதான் பிரஸ்லிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. அவர் லிசாவுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார். ஆனாலும் லிசாவுக்கு மயக்கம் தெளியாததால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் வைக்கப்பட்டது. ஆயினும் ஒரு கட்டத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் இவருடைய இறப்புக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு லிசா பேரியாட்ரிக் என அழைக்கப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதனால் சிறுகுடல் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டதும், அதை தொடர்ந்து அங்கு வளர்ந்த திசுக்களால் சிறுகுடலில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மரணம் இயற்கையானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்விஸின் ஒரே மகள் லிசா மேரி. இவர் 2005 ஆம் ஆண்டு தந்தையின் நிறுவனத்தை கவனித்து வந்தார். அது போல் கிரேஸ்லாந்தில் உள்ள எஸ்டேட்டையும் லிசா வைத்திருந்தார். இந்த எஸ்டேட்டில் 1977ஆம் ஆண்டு லிசாவின் தந்தை எல்விஸும் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்டார்.
பிரஸ்லி நிகோலஸ் கேஜ், மைக்கேல் ஜாக்சன், நடிகரும் இசையமைப்பாளருமான மைக்கேல் லாக்வுட் ஆகிய மூவரையும் திருமணம் செய்து கொண்டார், 4ஆவதாக கியோஃபை திருமணம் செய்தார். பிறகு 1994 இல் விவாகரத்து பெற்றார். லிசாவுக்கும் கியோஃப்க்கும் பிறந்த ஒரே ஒரு மகள் இருக்கிறார். லிசாவின் மகன் பெஞ்சமின் கியோஃப் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications