அமெரிக்க அதிபராகும் டிரம்புக்கு கிடைக்க போகும் சம்பளம்! எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47 வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்க உள்ளார். வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்பவருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்? என்னென்ன சலுகைகள்? என்னென்ன பாதுகாப்புகள் வழங்கப்படும்? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்கு தேவையான 270 எலக்ட்ரோல் வாக்குகளுக்கும் மேல் டிரம்ப் பெற்றதால், அமெரிக்காவின் 47-வது அதிபராகியிருக்கிறார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் 226 எலக்ட்ரோல் வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தல் என்றாலும் இந்த தேர்தல் உலகம் முழுவதும் பெரும் கவனம் பெறுவது வழக்கம். சர்வதேச விவகாரங்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்காவின் அதிபராக வரப்போவது யார் என்ற எதிர்ப்பு நிலவுகிறது.
வல்லரசு நாடாக அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்பவருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும்? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அமெரிக்க அதிபருக்கு ஆண்டுக்கு 4,00,000 டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.3.6 கோடி) வழங்கப்படுகிறது. இது போக பிற அலவன்ஸ்களாக கிட்டத்தட்ட ரூ.42 லட்சம் கிடைக்கும். புதிதாக பொறுப்பேற்கும் அதிபருக்கு வெள்ளை மாளிகையை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்வதற்கு 84 லட்சம் ரூபாய் சிறப்பு தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, தனது அலுவலகத்தை மறுவடிவமைப்புக்கு மட்டுமே செலவு செய்ய முடியும்.
அமெரிக்க அதிபர் தங்கியிருக்கும் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் பணியிடம் வெள்ளை மாளிகை என அழைக்கப்படுகிறது. உலகில் அதிக பாதுகாப்பு கொண்ட இடங்களில் ஒன்றாக வெள்ளை மாளிகை உள்ளது. வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெள்ளை மாளிகையில், பல்வேறு அலுவலகங்கள், வரவேற்பு அறைகள், தங்கும் அறைகள், பொழுதுபோக்கும் இடங்கள் ஆகியவை உள்ளன.
வீட்டில் தனது தனிப்பட்ட செலவுகளை ஈடு செய்வதற்காக 19 ஆயிரம் டாலரும் வழங்கப்படுகிறது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்புக்காகவே பெரும் தொகை செலவிடப்படுகிறது. சீக்ரெட் சர்வீஸ், எப்பிஐ ஏஜெண்ட், அமெரிக்க கடற்படை என பல அடுக்கு பாதுகாப்பு கொண்டதாக பாதுகாப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர் பயன்படுத்தும் பிரத்யேக பீஸ்ட் கார் அவருக்கு முன்பாகவே அங்கு கொண்டு செல்லப்படும்.
அந்த காரில் தான் அமெரிக்க அதிபராக இருப்பவர் பயணம் செய்ய வேண்டும். ரசாயன தாக்குதல் நடத்தினாலும், காருக்குள் இருக்கும் அதிபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. டயர் பஞ்சர் ஆனாலும் நிற்காமல் ஓடும் தன்மை கொண்டது. இந்த காரின் விலை 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.12 கோடியே 45 லட்சம்) ஆகும். ஆனால், இந்த காரின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.124 கோடி வரை செலவு செய்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications