94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா! மரத்தால் ஆன ஆஸ்கரை பெற்ற ஒரே நபர் யார் தெரியுமா? சுவாரஸ்ய தகவல்
ஆஸ்கர் விருதுகள் குறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்
வாஷிங்டன்: உலகின் உயரிய திரைப்பட விருதான ஆஸ்கர் விருதுகள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை அறிவோம்.
சினிமா துறையில் உலக அளவில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருதை நம் தமிழரான ஏ.ஆர். ரஹ்மான் பெற்றதால் அவருக்கு மேலும் பெருமை சேர்ந்தது.
அதுபோல் அர்ப்பணிப்புடன் உழைக்கும் சினிமா துறையினரை கவுரவிக்க வழங்கப்படும் இந்த ஆஸ்கர் விருதுகள் நாளை லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

ஆஸ்கர் விருதுகள்
ஆஸ்கர் விருதுகள் என்பது அந்த விருதுக்கு உண்மையான பெயர் அல்ல. இதற்கு முன்னர் அதை அகாதெமி அவார்ட் ஆஃப் மெரிட் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இந்த அகாதெமியின் நிர்வாக இயக்குநரான மார்க்ரெட் ஹெரிக், இந்த விருதை வடிவமைத்த போது அது தனது உறவினர் ஆஸ்கர் என்பரை நினைவூட்டுவதாக தெரிவித்தாராம். அதன் பின்னரே இது ஆஸ்கர் விருது என அழைக்கப்படுகிறது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா
முதன்முதலில் ஆஸ்கர் விருது கடந்த 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்தது. இந்த விழாவுக்கான டிக்கெட் கட்டணம் வெறும் 5 டாலர் மட்டுமே. இந்த விருது விழா வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. மேலும் இந்த விருதை பெறுபவர்களுக்கு அதில் முழு உரிமை இல்லை. விருதை பெறுவதற்கு முன்னர், தனது விருதை எங்கும் விற்க மாட்டேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

அகாதெமிக்கு விற்கலாம்
எனினும் தனது விருதை அகாதெமிக்கு வேண்டுமானால் விற்பனை செய்து கொள்ளலாம். அது கூட ஒரு டாலர்தான் கிடைக்கும். இந்த விதியானது 1950 இலிருந்து நடைமுறையில் உள்ளது. இரண்டாம் உலக போருக்கு பிறகு உலோகங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு ஆஸ்கர் விருது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.

எடை என்ன
இந்த விருதின் எடை 8.5 பவுண்ட் ஆகும். இதன் உயரம் 13.5 இன்ச் ஆகும். மரத்தால் செய்யப்பட்ட ஆஸ்கர் விருதை பெற்ற ஒரே நபர் 1938 ஆம் ஆண்டு சார்லி மெக்கார்டியை போல் டப்பிங் பேசிய எட்கர் பெர்கெனுக்கு வழங்கப்பட்டது. ஹாலிவுட் நடிகர் கெவின் ஓ கானல் 20 முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஒரு முறை கூட அந்த விருதை பெறவில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸ்
1972 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விழாவின் போது திரையிடப்பட்ட சார்லி சாப்லினின் லைம்லைட் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. அந்த படம் 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. பொதுவாக 7 நாட்களுக்கு முன்னரே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும். ஆனால் லைம்லைட்டிற்கு விதிவிலக்கு கொடுக்கப்பட்டது.

எப்படி அழைக்கப்பட்டது
1989 ஆம் ஆண்டு வரை ஆஸ்கர் விருது வழங்கும் போது "And the Winner is " என்ற அடைமொழியுடன் விருதாளரின் பெயர் அழைக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் "And the Oscar goes to.." என அழைக்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை பாப் ஹோப் என்பவர் 18 முறை தொகுத்து வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்து பில்லி கிரிஸ்டல் 9 முறையும் ஜானி கார்சன் 5 முறையும் தொகுத்து வழங்கியுள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications