விண்வெளியில் வீரர்களின் சிறுநீர், வியர்வையை என்ன செய்கிறார்கள் தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க
வாஷிங்டன்: விண்வெளியில், தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்துவதில் விஞ்ஞானிகள் கவனமாக இருப்பார்களாம். குறிப்பாக விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை கூட வீணாக்காமல் மறுசுழற்சி செய்யப்பட்டு தூய்மையான தண்ணீராக (Fresh water) மாற்றப்படுகிறதாம்.
நாசாவின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் பல மாதங்களாக தங்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளியில் எப்படி நாட்களை கழித்து வருகிறார்கள் என்பது பற்றிய பல்வேறு வியக்க தக்க தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு அவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது. விண்வெளியில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரின் உடல் நிலை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு காரணம், அண்மையில், சுனிதா வில்லியம்சின் புகைப்படம் வெளியானது.
அதில், அவரது உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக பலரும் கூறியிருந்தனர். அதாவது, அவரது கன்னங்கள் ஒட்டி எலும்பும் தோலுமாய் சுனிதா வில்லியம்ஸ் காணப்படும் புகைப்படம் ஒன்றைக் கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக சுனிதாவின் சக ஊழியரான ஒருவர் கூறினார். இதனால், அவரது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. எனினும், சுனிதா வில்லியம்ஸ் தான் நலமாக இருப்பதாக கூறி, விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரின் உடல் நிலையை நாசாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவுகள் உள்ளிட்டவையும் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் என்ன மாதிரியான உணவுகள் உட்கொள்வார்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பது பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன.
விண்வெளியில், தண்ணீரை முறையாகவும் வீணாக்காமல் பயன்படுத்துவதிலும் விஞ்ஞானிகள் கவனமாக இருப்பார்களாம். விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை கூட மறுசுழற்சி செய்யப்பட்டு தூய்மையான தண்ணீராக (Fresh water) மாற்றப்படுகிறதாம். அதேபோல, சர்வதேச விண்வெளி மையத்தில் 530 கலோன்கள் தண்ணீர் எப்போதும் இருக்கும் என்றும், விண்வெளி வீரர்களுக்கு ஒரு நாளைக்கு 3.8 பவுண்ட் உணவு வழங்கப்படும் எனவும் நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications