விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சாப்பிடுவது எப்படி? என்ன உணவு வழங்கப்படும்? ஆச்சரியமா இருக்கே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோட் கிட்டத்தட்ட 5 மாதங்களாக அங்கேயே தங்கி இருக்கிறார்கள். விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் என்ன மாதிரியான உணவு உட்கொள்வார்கள்?, அவர்களின் டயட் எப்படி இருக்கும்? என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் உள்ளது. இந்த விண்வெளி மையத்தில் தங்கியிருந்து விண்வெளி வீரர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் நாசா விஞ்ஞானியுமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

space sunita williams science

8 நாட்கள் மட்டும் தங்கி ஆய்வு செய்துவிட்டு இருவரும் பூமி திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. பல மாதங்களாக விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமே பூமிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் சுனிதா வில்லியம்சே இதற்கு மறுப்பு தெரிவித்து பேசியிருந்தார். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் காலத்தில் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் என்ன மாதிரியான உணவு உட்கொள்வார்கள், அவர்களின் டயட் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் போது, தானியங்கள், பவுடர் பால், பிட்சா, காக்டையில்ஸ், பொறித்த சிக்கன், மீன்கள் போன்றவைகளையும் உட்கொள்வதாக விவரமறிந்தவர்கள் கூறியுள்ளனர். அதேவேளையில், பழங்கள் மற்றும் காய்கறி போன்றவைகளை குறைந்த அளவே சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள். சர்வதேச விண்வெளி மையத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு நிரப்பப்படும் எனவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உலர்ந்த நிலையில், பாதுகாக்கப்படுமாம்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஒவ்வொரு விண்வெளி வீரர்களுக்கும் தினமும் தேவைப்படும் அளவுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உணவு வைக்கப்பட்டு இருக்குமாம். பொதுவாக இது பாக்கெட் செய்யப்பட்ட உணவாகவோ.. உறை நிலையிலும் உலர்த்தப்பட்டதாகவும் இருக்கும். இதை மீண்டும் சூடுபடுத்தி சுடச்சுட சாப்பிடவும் செய்யும் வகையில் தான் வழங்கப்படுகிறதாம்.

இறைச்சி மற்றும் முட்டை ஆகியவை பூமியிலேயே வேக வைத்து, விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். இவற்றை விண்வெளி வீரர்கள் மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிட முடியுமாம். சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் தங்களுக்கு தேவையான உணவுகளை அவர்களே தயாரித்து காந்த சக்திகொண்ட டிரேக்கள் மற்றும் உலோக பாத்திரங்களில் வைத்து சாப்பிடுகிறார்களாம்.

விண்வெளி மையத்திற்கான மருத்துவர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தேவையான அளவு கலோரி உணவு எடுத்துக்கொள்கிறார்களா? என்பதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இரு விண்வெளி வீரர்களும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்பட உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+