எலான் மஸ்க்கும் சுந்தர் பிச்சையும் இந்த மாடல் போனா வைத்திருக்கிறார்கள்? சிறப்பம்சங்கள் என்ன?
வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்கும் கூகுள் சிஇஓவான சுந்தர் பிச்சையும் எந்த வகை ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
செங்கல் மாதிரி இருந்த போன் முதல் கையடக்க போன் வரை எத்தனை போன்கள் வந்துவிட்டன. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களில் புதுமைகள் புகுத்தப்படுகின்றன.

ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எந்த இடத்திலிருந்தும் நம் பணிகளை முடித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
எப்போதுமே நாம் எத்தனை விலையுயர்ந்த போன் வைத்திருந்தாலும், நாம் பயன்படுத்தும் போனின் ஓனர் என்ன போன் பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து கொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகம். அது போல் நமக்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை, பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என யார் என்ன நிறுவனத்தின் போனை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவோம்.
அந்த வகையில் கூகுள் சிஇஓவான சுந்தர் பிச்சையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்கும் எந்த மாடல் போனை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். அது என்ன என்பது தெரியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா கடந்த 20ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில்தான் இவர்கள் இருவரும் என்ன போன் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்தது.
ஒரு கட்டத்தில் அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸ், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் ஆகியோர் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சுந்தர் பிச்சையும் மஸ்க்கும் போனை பயன்படுத்தியது அங்கிருந்த வீடியோக்களில் சிக்கியது.
அதன்படி சுந்தர் பிச்சை வைத்திருந்தது கூகுள் நிறுவனத்தின் pixel 9 அல்லது pixel XL போனாக இருக்கும். அது போல் எலான் மஸ்க் வைத்திருந்தது iPhone 16 Pro Max ஆகும். இதில் ஐபோனின் விலை இந்திய மதிப்பில் 1.50 லட்சம் இருக்கலாம். இந்த போனின் டிஸ்பிளே 6.9 இன்ச் இருக்கும். இதில் ஹெக்ஸா கோர் எனும் பிராசசர் பயன்படுத்துகிறார்கள். 48 எம்பி கேமரா, ஃபிரண்ட் கேமரா 12 எம்பி . தண்ணீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது, வாட்டர் புரூஃப். இதில் வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறது
சுந்தர் பிச்சை வைத்திருந்த போன் கூகுள் நிறுவனத்தினுடையது. இதன் விலை 75 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை இருக்கும். இதில் 50 எம்பி கேமரா இருக்கும். இதன் சைஸ் 6.3 இன்ச் இருக்கும். கூகுள் டென்சர் ஜி4 பிராசசர் பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் திறன்வாய்ந்த சிப். இந்த போனில் நவீன செயற்கை நுண்ணறிவான ஜெமினி பயன்படுத்தப்படுகிறது. இதில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 இருப்பதால் இந்த போன் கீழே விழுந்தாலும் கீறல் விழாது.
இவங்க 2 பேரும் இந்த போன்களை யூஸ் செய்கிறார்கள். நீங்கள் யாராவது கூகுள் பிக்சல் அல்லது ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் பயன்படுத்துகிறீர்களா என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள். அப்படியே அந்த போனில் வேறென்ன சிறப்புகள் இருக்கிறது என்பதையும் சொல்லுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications