ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்.. வருமான வரியே விதிக்காத நாடுகள்.. எதெல்லாம் தெரியுமா?
வாஷிங்டன்: வருமான வரி என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் விதிக்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட வருமான வரி உண்டு.. ஆனால் ஒரு சில நாடுகளில் வருமான வரியே கிடையாது என்பது தெரியுமா? உலகில் எந்தெந்த நாடுகளில் வருமான வரி விதிக்கப்படவில்லை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்களுக்கு பெரிய சுமைகளில் ஒன்றாக வருமான வரி போன்ற வரிவிதிப்பு உள்ளது. வருடம் முழுக்க கஷ்டப்பட்டு பல மறைமுக வரிகளை கட்டிய பிறகும், வருமானத்திற்கு தனியாக ஒரு விதிக்கப்படுகிறதே என்ற ஆதங்கத்தை வரி கட்டுபவர்கள் வெளிப்படுத்துவதை பார்க்க முடியும்.

இந்தியா மட்டும் அல்ல.. உலகில் வல்லமை மிக்க நாடுகளாக அறியப்படும், அமெரிக்கா போன்ற நாடுகள் கூட குடிமக்களிடம் இருந்து வருமான வரியை வசூலிக்கத்தான் செய்கின்றன. சரி அதெல்லாம் இருக்கட்டும். வருமான வரியே விதிக்காத சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அது எந்தெந்த நாடுகள் என்று பார்க்கலாம் வாருங்கள்...
ஐக்கிய அரபு அமீரகம்: எண்ணெய் வளம் மிகுந்த ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டு மக்களிடம் இருந்து வருமான வரியாக ஒரு பைசா வசூலிப்பது இல்லை. வருமான வரிக்கு பதிலாக அங்கு சரக்கு மற்றும் சேவைகளுக்கு 5 சதவிகித வாட் வரி விதிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம் என்பது குவைத், மஸ்கட், அபுதாபி ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
பஹமாஸ்: கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று பஹமாஸ். பல தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 4 லட்சம் தான். தங்கள் நாட்டு மக்களிடம் இருந்து பஹமாஸ் வரி வசூலிப்பது இல்லை. மூலதன ஆதாய, பரம்பரை வரி, கிப்ட் டேக்ஸ் என எதுவுமே இங்கு கிடையாது. இதனால் வெளிநாட்டினர் கூட இங்கு வந்து முதலீடுகளை செய்கிறார்கள்.
பெர்முடா: வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான பெர்முடாவில் கூட வருமான வரி கிடையாது. அதற்கு பதிலாக அந்த நாட்டில் பேரோல் என்ற வரி விதிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை இந்த பேரோல் வரியில் செலவிடுகிறது.
வானூட்டு:வானூட்டு நாட்டில் பெரும்பாலான வருமானங்களுக்கு வரி கிடையாது. சொத்து வாடகை வரியாக 12.5 சதவிகிதம் வரி வசூலிக்கப்படும். இங்குள்ள நிறுவனங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு எந்த வரியும் கிடையாது. தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு இதுவாகும். இந்த நாட்டின் மக்கள் தொகை 3.27 லட்சம் மட்டும்தான்.
பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டில் வருமான வரி கிடையாது. எண்ணெய் வளம் மிக்கதாக இந்த நாடு உள்ளது. வருமான வரி இல்லை என்றாலும் சமூக காப்பீடு மற்றும் வேலை இல்லாதவர்களுக்கான நிதி ஆகியவற்றிற்கு பங்களிக்க வேண்டியிருக்கும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications