கட்டிலோட விலை ரூ 5 கோடியாம்.. தூங்கி சேம்பிள் பார்த்து பிடிச்சா வாங்கலாம்.. அப்படி என்ன விசேஷம்?
வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகர்கள் ரூ 5 கோடி மதிப்புள்ள கட்டிலைத்தான் வாங்குகிறார்களாம். என்ன தலைசுற்றுகிறதா? அப்படி அந்த கட்டிலில் என்ன ஸ்பெஷலாக இருக்கிறது தெரியுமா?
கட்டாந்தரையில் துண்டை விரித்து படுத்தால் சுகமாக தூங்குவோரும் இருக்கிறார்கள். மெத்து மெத்துனு மெத்தையில் ஏசி அறையில் படுத்தாலும் தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராதவர்களும் இருக்கிறார்கள்.

அந்த காலத்தில் இலவம் பஞ்சில் மெத்தை, தலையணை வந்தது. ஆனால் பின்னர் ஃபோம் எனும் ஒரு பஞ்சினால் வந்தது. இது உடல்நலனுக்கு கேடு என்றும் உடல் வலியையும் உடல் சூட்டையும் ஏற்படுத்தும் என்பது பயன்படுத்தியவர்களுக்கு நன்றாக தெரியும்.
தற்போது அதிக பணச்செலவில் சொகுசு மெத்தைகள் எல்லாம் வந்துவிட்டன. இரட்டை மெத்தையின் விலை குறைந்தது ரூ 5 ஆயிரம் முதல் இருக்கிறது. அதற்கு மேல் நிறைய விலை கொடுத்தும் வாங்கலாம். ஆனால் பாலிவுட் நடிகர்கள் 5 கோடிக்கு மெத்தை வாங்குகிறார்களாமே, கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.
அப்படி 5 கோடிக்கு வாங்கும் மெத்தையில் என்னதான் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. சாதாரணமாக கட்டில்கள் அதிகபட்சமாக ரூ 4 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ரூ 5 கோடி எல்லாம் ரொம்ப ஓவர். இந்த 5 கோடி ரூபாய்க்கு ஒரு பெரிய பங்களாவையே கட்டி விடலாம் போலயே! காசுக்கேற்ற பொருள் என்பார்கள் அல்லவா?
அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹெல்டென்ஸ் என்ற நிறுவனம்தான் உலகிலேயே விலை அதிகமான கட்டில்களை தயாரித்து வருகிறது. ஆரம்ப விலையாக ரூ 21 லட்சம் முதல் இந்த நிறுவனம் கட்டில்களை தயாரிக்கிறது. 1852 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திடம் இருந்து கட்டில்கள் வாங்குவதை பிரபலங்கள் கவுரவமாக பார்க்கிறார்கள்.
குதிரையின் வாலில் உள்ள முடியை பயன்படுத்தி மெத்தைகளை ஹெஸ்டென்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கட்டிலின் விலை அதிகமாக இருப்பதற்கு குதிரையின் வாலும் ஒரு காரணமாம். இந்த ஷோரூமுக்கு சென்று அந்த கட்டில்களில் தூங்கி பார்த்துவிட்டு உங்கள் மன நிம்மதி கிடைத்தால் கட்டிலை வாங்கலாம். டெஸ்ட் டிரைவ் கார்களை போல டெஸ்ட் கட்டில்களும் உள்ளன.
இவை துபாய், டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஹெஸ்டென்ஸ் ஷோரூம்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டில்களைத்தான் டாம் குரூஸ், ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட் உள்ளிட்டோர் வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள். இந்த மெத்தைகள் இயற்கை பொருட்களில் இருந்து கை வேலைப்பாடு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications