கமலா ஹாரிஸ் போட்டிருந்த கம்மலை நோட் பண்ணீங்களா! விவாதத்தில் நடந்ததே வேறயாம்! மிக பெரிய குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தல் கலந்து கொள்ளும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேற்றைய தினம் விவாதம் நடந்தது. இந்த விவாதம் முடிந்த உடனே இணையத்தில் பலவித தகவல்கள் பரவின. குறிப்பாக இதில் கமலா ஹாரிஸ் அணிந்திருந்த கம்மல் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அவர் ஒயர்லெஸ் இயர்போன்களை பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் நவ. மாதம் நடக்கும் விவாதத்தில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் கலந்து கொள்கிறார்கள். இரு தலைவர்களுக்கும் இடையேயான முதல் விவாதம் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

முதல் விவாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், இணையத்தில் இது தொடர்பாகப் பல வித தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாகக் குடியரசு கட்சியினர் கமலா ஹாரிஸ் அணிந்திருந்த கம்மல் தொடர்பாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காதணிகள்: அது வெறும் காதணி மட்டுமில்லை அது இயர்போன்களாக இருக்கலாம் என்பதே அவர்கள் வாதமாகும். மேலும், அவரது காதணி பார்க்க அப்படியே நோவா எச்1 ஆடியோ காதணிகளைப் போல இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்த நோவா மாடல் பார்க்க ஸ்டைலான காதணி போலத் தெரிந்தாலும் அது உண்மையில் ஒரு வயர்லெஸ் இயர்போன் ஆகும்.
டிரம்ப் ஆதரவாளர்கள்: இது தொடர்பாக டிரம்ப் ஆதரவாளர்கள் ஒருவர், "டிரம்பிற்கு எதிரான ஏபிசி விவாதத்தின் போது கமலா ஹாரிஸ் காதணிகளில் இயர்போன்களை வைத்துப் பயன்படுத்தி இருக்கிறார்" என்றார்.
அதேபோல மற்றொரு நபர், "இந்த விவாதத்தில் டிரம்ப் மிகச் சிறப்பாகப் பேசினார். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அவர் போட்டிருந்த கம்மல் கவனிக்க வைத்தது. அந்த காதணிகள் பார்க்க இப்படியே இயர்போன்கள் போல இருந்ததை மறுக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் தரப்பு: அதேநேரம் கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் இதை முற்றிலுமாக மறுக்கிறார்கள். கமலா ஹாரிஸ் அணிந்திருக்கும் காதணிகள் டிஃப்பனி ஹார்ட்வேர் முத்து கம்மல் என்றும் இதற்கும் நோவா எச்1 ஆடியோ இயர்போனுக்கும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இரு படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். இவர்கள் குறிப்பிடும் இந்த முத்து காதணி 3,300 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சிலர் கமலா ஹாரிஸ் எப்போதும் முத்து காதணிகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு முன்பு நடந்த பல விவாதங்களிலும் இதுபோன்ற காதணிகளை அவர் பயன்படுத்தியதில் போட்டோக்களை பகிர்ந்துள்ளனர். மேலும், இயர்போன்களுக்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டையும் காட்டுகிறார்கள்.
வாய்ப்பே இல்லை: இணையத்தில் இதுபோன்ற தகவல்கள் பரவினாலும் கூட கமலா ஹாரிஸ் இதுபோன்ற இயர்போன்களை பயன்படுத்த வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் ஏபிசி நடத்திய விவாதத்தின் விதிமுறைகளில் இதுபோன்ற எந்தவொரு கருவியையும் நிச்சயம் எடுத்து வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. விவாதத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பேப்பர் பேனா மட்டுமே தரப்படும் என கூறப்பட்டு இருந்தது. இதனால் அவர், இயர்போன்களை அணிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி அணிந்திருந்தால் அவரை ஏபிசி செய்தி நிறுவனம் விவாதத்தில் அனுமதித்தே இருக்காது.
நெட்டிசன்கள் கூறும் நோவா ஹெச் 1 இயர்போன்கலை கிக்ஸ்டார்டர் என்றும் அழைக்கிறார்கள். அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயர்போன் கிளிப்-ஆன் புளூடூத் வகை இயர்போன் ஆகும். முத்துக்கள் உடன் வரும் ஒரே இயர்போன் இந்த நோவா எச்1 ஆகும்.
-
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications