கொரோனா வைரஸுக்கு பல பெயர்கள் உண்டு.. அதை குங் ஃப்ளூனு கூட சொல்லலாம்.. சீனாவை சீண்டும் அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் ஒரு வகையான நோய் என்றும் வரலாற்றில் மற்ற நோய்களை காட்டிலும் இதற்கு நிறைய பெயர் உண்டு என்றும் இதை நாம் குங்ஃப்ளூ என அழைக்கலாம் என்றும் சீனாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வம்புக்கிழுத்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 200- நாடுகளில் பரவியுள்ளது. இதனால் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவுவதல் ஏற்கெனவே சீனாவுக்கு தெரிந்திருந்தும் அதுகுறித்து சீனா முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என டிரம்பிற்கு கோபம் உள்ளது.
கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பிவிட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். ஒரு வேளை இது மட்டும் நிஜமாக இருந்தால் சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அமெரிக்கா
இந்த வைரஸ் வுகானில் இருந்து பரவியதாக சொல்லப்படுவதால் இதை வுகான் வைரஸ் என்றும் டிரம்ப் அழைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வைரஸ் பரவியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

ஓக்லாஹோமா
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுவார் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை துல்சா, ஓக்லாஹோமா ஆகிய இடங்களில் தொடங்கினார்.

19 வகை பெயர்கள்
உலக நாடுகளில் கொரோனா வைரஸால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது டிரம்ப் கூறுகையில் கொரோனா ஒரு நோய். வரலாற்றில் மற்ற நோய்களை காட்டிலும் கொரோனாவுக்கு நிறைய பெயர்கள் உள்ளன. இதை குங்ஃப்ளூ என நான் அழைக்கிறேன். 19 வகையான பெயர்கள் மூலம் என்னால் அழைக்க முடியும்.

குங்ஃப்ளூ
பலர் கொரோனாவை வைரஸ் என்கிறார்கள். இன்னும் பலர் இதை ஃப்ளூ என்கிறார்கள். என்ன வித்தியாசம்? 19 அல்லது 20 பெயர்களை நாம் இதற்கு வைக்கலாம் என நினைக்கிறேன் என்றார். குங்ஃபூ என்பது சீன மக்களின் தற்காப்பு கலையாகும். சண்டையிட கைகளையும் கால்களையும் மட்டுமே பயன்படுத்துவர். அதனால் டிரம்ப் கொரோனா வைரஸை குங்ஃப்ளூ என்றழைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications