கமலா ஹாரிஸ் vs டிரம்ப் விவாதம் ரெடி.. பைடனை காலி பண்ணிட்டாரு.. அடுத்து என்ன? பரபர தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதிபர் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே அடுத்த மாதம் விவாதம் நடக்க உள்ளது. இந்த விவாதத்தில் தான் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்க உள்ளனர் என்பதால் இதில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவ. இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் இதற்காக மிகத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் முதல்முறையாக நேருக்கு நேர் சந்தித்து விவாதம் நடத்த இருக்கிறார்கள்.
விவாதம்: கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், வரும் செப். மாதம் மட்டும் மூன்று விவாதங்களில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இடையே வரும் செப்டம்பர் 10ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறுவதாக அங்குள்ள பிரபல ஊடகமான ஏபிசி அறிவித்து இருந்த நிலையில், டிரம்ப் அதை உறுதி செய்துள்ளார்.
இந்த விவாதம் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மிக முக்கியமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூன் மாதம் டிரம்பிற்கும் பைடனுக்கும் இடையே விவாதம் நடந்தது. அதில் டிரம்ப் கை தான் ஓங்கி இருந்தது. பைடனின் உடல்நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பது அந்த விவாதத்தில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. அந்த விவாதத்திற்கு பிறகே பைடனின் வீழ்ச்சி தொடங்கியது. கருத்துக்கணிப்புகளில் அவருக்கான ஆதரவு சரிந்தது.
ஏன் முக்கியம்: ஜனநாயக கட்சிக்கு உள்ளேயே அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கினர். இதனால் வேறு வழியின்றி அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். அதன் பிறகு கமலா ஹாரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கான ஆதரவும் நன்கொடைகளும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதிபர் தேர்தல் சர்வேக்களிலும் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ந்தச் சூழலில் மீண்டும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே விவாதம் நடப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தடாலடி கருத்து: இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "விவாதங்கள் மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஒருவரது திட்டம் என்னவென்று மக்களுக்கு அப்போது தான் தெளிவாகத் தெரிய வரும். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற எனது பிளான்களை விவாதத்தில் தான் தெளிவாகச் சொல்ல முடியும். மேலும், கமலா ஹாரிஸ் என்னுடன் விவாதம் நடத்தும் அளவுக்குப் புத்திசாலி இல்லை.. இது விவாதத்தில் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸ் தனது துணை அதிபர் வேட்பாளராக மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸை அறிவித்துள்ள நிலையில், அவர் ஒரு தீவிர இடதுசாரி என்றும் குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும் கமலா ஹாரிஸ் ஜமைக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிக்குப் பிறந்தவர் என்றும் அவர் கறுப்பினத்தவரே இல்லை என்றும் டிரம்ப் விமர்சித்தார்.
மிக முக்கியம்: டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே நடக்கும் விவாதம் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் டிரம்பின் கை ஓங்கப் போகிறதா.. இல்லை யாரும் எதிர்பார்க்காத வகையில் கமலா ஹாரிஸ் இறங்கி அடிக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications