முடிவுக்கு வரும் சீனா - அமெரிக்கா மோதல்? டிரம்ப் எடுத்த திடீர் முடிவு.. ஜி ஜின்பிங்குடன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனா்ட் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்மூலம் இருதரப்புக்கும் இடையேயான வர்த்தக மோதல் முடிவுக்கு வரும் என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே கடும் வர்த்தக போர் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வந்தவுடன் சீனாவுக்கு தொடர்ந்து வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவுக்கு வரிகளை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது.

donald trump xi jinping us

அதன்பிறகு சீனாவுக்கான வரியை டிரம்ப் குறைத்தார். ஆனாலும் கூட மோதல் தொடர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட சீனா தனது வர்த்தக ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ‛‛அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது. அதன்பிறகு அதுபற்றி நாங்கள் உங்களிடம் தெரிவிப்போம்'' என்றார்.

இருநாடுகள் இடையேயான வர்த்தக பிரச்சனைகள், ஜெனீவாவில் கடந்த மாதம் ஏற்பட்ட ஒப்பந்தம் உள்ளிட்டவற்றின் வேறுபாடுகளை தீர்ப்பது தொடர்பாக இருதலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஏற்கனவே கரோலின் லீவிட் கூறியிருந்தார். தற்போது அவர்கள் 2 பேரும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதை உறுதி செய்துள்ளார். இருப்பினும் இருவரும் எப்போது பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பதற்கான நேரம், தேதியை அவர் குறிப்பிடவில்லை.

இருப்பினும் இருதலைவர்கள் இடையேயான இந்த பேச்சுவார்த்தை மோதலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ‛‛இரண்டு வாரங்களுக்கு முன்பு சீனா கடும் பொருளாதார ஆபத்தில் இருந்தது. சந்தையில் கிட்டத்தட்ட வர்த்தகம் செய்ய முடியாத நிலையை உருவாக்கிறது. உண்மையில் சீனாவுடன் நாங்கள் மோதினோம். இது அவர்களுக்கு பேரழிவை தந்தது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

சீனாவுக்குள் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அது எங்களுக்கும், அவர்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் சீனாவை காப்பாற்ற அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டேன். இந்த ஒப்பந்தம் காரணமாக எல்லாம் சுமூகமானது. சீனா வர்த்தகத்தை தொடங்கியது. இது நல்ல செய்தியாக அமைந்தது. ஆனாலும் கூட சீனா அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறியது. இது கெட்ட செய்தியானது'' என்றார். இருப்பினும் சீனா ஒப்பந்தத்தை எப்படி மீறியது என்று டொனால்ட் டிரம்ப் கூறவில்லை. இப்படியான சூழலில் இருநாட்டு தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+