"ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் ரூ.4.76 லட்சம்".. டிரம்ப் அறிவித்த தேர்தல் வாக்குறுதி! பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் விரைவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இடைக்கால தேர்தலில் 2 சபைகளிலும் குடியரசு கட்சி வெற்றி பெற்றால் வயது வந்த அனைத்து அமெரிக்கர்களுக்கும் ரூ.4.76 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

donald-trump-announces-5-000-dollars-payout-to-us-adults-if-republicans-win-midterm-elections

அமெரிக்காவில் விரைவில் இடைக்கால தேர்தல் (Midterm Elections) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சிகள், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இதற்கு இருகட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்நிலையில் தான் நேற்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் குடியரசு கட்சியின் இடைக்கால தேர்தல் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

''நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்கா இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றால் வயது வந்த ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் (Adults Americans)5 ஆயிரம் டாலர் வழங்கப்படும்.குடியரசு கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட் ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்றால் இந்த தொகை வழங்கப்படும்.

பொருளாதார ரீதியாக நாம் அடைந்துள்ள அபாரமான வலிமை, வெற்றி உள்ளிட்டவற்றின் காரணமாக அமெரிக்காவின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் 5,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான ஈவுத்தொகையை (Dividend)நான் வழங்குவேன். இதற்கு ஒரு கட்டுப்பாடு உள்ளது. அது என்னவென்றால் வழங்கப்படும் தொகையை அமெரிக்காவில் மட்டுமே செலவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவின் ஒரு டாலர் இந்திய ரூபாயில் ரூ.95.22 ஆக உள்ளது. அப்படி பார்த்தால் 5 ஆயிரம் டாலர் என்பது இந்திய ரூபாயில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 80 ஆகும். டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பின் பின்னணியில் முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் என்பது அதிபராக இருப்போரின் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தாது என்றாலும் கூட அது அவரது ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் மதிப்பெண்ணாக பார்க்கப்படுகிறது. அதாவது அமெரிக்காவில் கடந்த 2024ம் ஆண்டு கடைசியில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிசை வீழ்த்தி குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். ஒவ்வொரு முறையும் புதிய அதிபர் தேர்வாகி 2வது ஆண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இடைக்கால தேர்தல் (Midterm Election)நடக்கும். இந்த தேர்தல் என்பது அமெரிக்காவில் கீழ்சபையாக இருக்கும் காங்கிரஸ் சபையில் 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட்டில் உள்ள 100 இடங்களில் 3ல் ஒரு பகுதியாக 33 அல்லது 34 இடங்களுக்கும் நடக்கும்.

இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். மாறாக பைடன், கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அது டொனால்ட் டிரம்புக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். பொதுவாக இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் கட்சி தோற்றாலும் கூட அவரது அதிபர் பதவிக்கு பிரச்சனை வராது. ஆனால் புதிதாக ஏதாவது சட்ட திருத்தம், விதிகளை கொண்டு வர வேண்டும் என்றால் காங்கிரஸ், செனட் சபைகளின் ஆதரவு வேண்டும். தோற்றால் அது கிடைக்காது.

டிரம்பால் முழு சுதந்திரத்துடன் அதிபராக செயல்பட முடியாது. காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி டிரம்புக்கு எதிராக குற்றவியல் நடைமுறையை கொண்டு வரலாம். டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி கூறி அவருக்கு நெருக்கடியை கொடுத்து பதவி நீக்கம் வரை கொண்டு செல்லலாம் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதனால் தான் நம் நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளின் போது வெளியிடப்படும் பணம் சார்ந்த அறிவிப்புகளை டொனால்ட் டிரம்பும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+