கனடாவின் விமானங்களுக்கு 50 சதவீத வரி.. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி மிரட்டல்
வாஷிங்டன்: கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் விமானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக மிரட்டி உள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தக போர் இன்னும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவின் பாம்பார்டியர் விமானம் தயாரிப்பு நிறுவனத்தை முடக்க திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவும், கனடாவும் அண்டை நாடுகளாக உள்ளன. ஆனால் இப்போது இருநாடுகளும் எதிரெதிர் துருவங்களாக மாறி உள்ளன. கனடாவை முடக்கும் வகையில் டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அதன்படி அந்த நாட்டின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைத்து கொள்ள டிரம்ப் விரும்புகிறார். டிரம்பின் இத்தகைய செயல்பாட்டுக்கு கனடா கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவுக்கு 50% வரி
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் மீண்டும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என கனடாவை மிரட்டி உள்ளார். இந்த மிரட்டல் வழியாக அமெரிக்கா கனடாவின் விமானத்துறையை குறிவைத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
டென்ஷனான டிரம்ப்
‛‛கனடா உடனடியாக அமெரிக்காவின் கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் (Gulfstream Aerospace) நிறுவனத்தின் விமானங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கனடா, கல்ஃப்ஸ்ட்ரீம் 500, 600, 700, 800 ஜெட் விமானங்களுக்குத் தவறான கண்ணோட்டத்திலும், சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட்டு அனுமதி சான்று கொடுக்க மறுக்கிறது.
சிறந்த விமானங்கள்
ஆனால் உண்மையில் இந்த விமானங்கள் சிறந்த, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிய விமானங்களில் ஒன்று இதனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கனடா சான்று கொடுக்காமல் கல்ஃப்ஸ்ட்ரீம் விமானங்களின் விற்பனையை தடுக்கிறது.
50 சதவீத வரி மிரட்டல்
கல்ஃப்ஸ்ட்ரீம் விமானங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை கனடாவில் தயாரிக்கப்படும் பாம்ப்ராடியரின் குளோபல் எக்ஸ்பிரஸ் (Global Express) விமானங்களுக்கான சான்றிதழ்களை நாங்கள் ரத்து செய்வோம். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் விற்கப்படும் கனடா நாட்டு எந்த விமானத்திற்கும் 50 சதவிகித வரி விதிப்பேன்'' என்று மிரட்டி உள்ளார்.
பின்னணி என்ன?
அதாவது பாம்பார்டியரின் குளோபல் எக்ஸ்பிரஸ் என்பது கனடா நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தனிநபர்கள் பயன்படுத்தும் விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த விமானங்களை அமெரிக்காவில் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கனடாவின் பாம்பராடியரின் குளோபல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா பெரிய சந்தையாக உள்ளது.
கோபத்துக்கு என்ன காரணம்?
அதேவேளையில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்தது. இந்த நிறுவனத்தின் விமானங்களை கனடாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் கனடா அரசு அனுமதி வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. டிரம்ப் மீதான கோபத்தாலும், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் கனடா இதனை செய்வதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் கல்ஃப்ஸ்ட்ரீஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு கனடா உடனடி அனுமதி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு விற்கப்படும் பாம்பார்டியரின் குளோபல் எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications