ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா.. இந்தியாவை மிரட்டிவிட்டு புதினிடம் சரணடைந்த டிரம்ப்! ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று மிரட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு வரிகளை விதித்தார். ஆனால் இப்போது டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் சரணடைந்துள்ளதோடு, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா டீசல் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனத ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில், ''ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நான் மிகவும் வெற்றிகரமாக கலந்துரையாடலை முடித்தேன்.அதில், ரஷ்யா உடனடியாக 300,000 டன்களுக்கும் அதிகமான டீசல் எரிபொருளை அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைக்கு வழங்கும் என்றும், நவம்பர் மாதத்தில் மேலும் 500,000 டன்களையும், அதனைத் தொடர்ந்து உடனடியாக 1,000,000 டன்களையும் வழங்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

Donald Trump

மேலும், அவர்களின் டீசல் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையை பொறுத்து, ரஷ்யா குறுகிய காலத்திற்குள் 3,000,000 டன் டீசல் எரிபொருளை வழங்கும். ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான நம்முடைய முழுமையான கட்டுப்பாடு, ரஷ்ய எரிசக்தி சார்ந்த இந்த அறிவிப்பு என்பது அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதம் டீசல் விலைகளை வேகவேகமாக குறைக்கும்.

இதில் அமெரிக்கர்களுக்கு குறிப்பாக நமது விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் வாகன ஓட்டிநர்களுக்கு குறைந்த விலையில் டீசல் கிடைப்பதற்கு தான் முன்னுரிமையாகும். இது ஒரு மிகப் பெரிய மற்றும் முக்கியமான அறிவிப்பு. மேலும் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்பு தற்போது பெரிய ட்விஸ்ட்டாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இதனை டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சர்கள் விமர்சனம் செய்தனர். கச்சா எண்ணெய் வாங்க இந்தியா வழங்கும் பணத்தை வைத்து தான் ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடர்ந்து வருகிறது என்று விமர்சனம் செய்தனர்.

அதுமட்டுமின்றி ரஷ்யா - உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக அதிபர் விளாடிமிர் புதினுக்கு நிதி உதவி செய்கிறது எனக்கூறி அமெரிக்கா செல்லும் நம் நாட்டுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அதோடு ஆகஸ்ட் மாதத்தில்ல் அமெரிக்க செனட் சபை ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவை நிறைவேற்றினர்.

இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனை உள்ளிட்டவற்றால் அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் சரிசெய்ய முடியாமல் டிரம்ப் தவித்து வருகிறார். இதனால் வேறு வழியின்றி ரஷ்யாவிடம் இருந்து முதற்கட்டமாக 3 லட்சம் டன் அளவுக்கான டீசல் வாங்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+