முழுக்க ஆபாச காட்சிகள்.. டிரம்ப் வாழ்க்கை வரலாறு படத்தில் இப்படியா.. அதிர்ந்த சென்சார் அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் இளமைக் காலத்தை விளக்கம் படம் ஒன்று இப்போது அங்கு ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தை இந்தியாவிலே ரிலீஸ் செய்ய முயற்சி நடந்த நிலையில், அதில் இருந்த ஆபாச காட்சிகளைப் பார்த்து சென்சார் அதிகாரிகள் அதிர்ந்து போனார்களாம்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடும் நிலையில், அவர் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்.

us presidential election 2024 donald trump usa 2024

டிரம்ப் பயோபிக்: அதிபர் தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இளமைக் காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் அவர் என்ன செய்தார் என்பதை விளக்கும் வகையிலான படம் அங்கு வெளியானது. பயோபிக் படம் என்றவுடன் நம்ம ஊரை போல அவரது பாசிட்டிவ் பக்கங்களை மட்டும் வைத்து ஆஹா ஓஹோ என்று இருக்கும் என நினைத்துவிடாதீர்கள்.

தி ஆஃப்ரீன்ட்டிஸ் என்ற இந்த படத்தில் அவரது இளமைக் காலத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் பல சர்ச்சை காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. திரை விமர்சகர்கள் இந்த படத்தைப் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். அதேநேரம் டிரம்ப் இந்த படத்தை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். தன்னை பற்றிய அவதூறான படம் என்றும் இது மிகவும் மலிவான மற்றும் கேவலமான வேலை என்றும் கடுமையாகச் சாடினார்.

இந்தியா ரிலீஸ்: இந்த படம் இந்தியாவிலும் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால், சென்சார் போர்ட் இந்த படத்தைப் பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டார்களாம். சென்சார் சான்றிதழ் தர வேண்டும் என்றால் பல கட்களை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள். குறிப்பாகப் படத்தில் பல நிர்வாண மற்றும் ஆபாச காட்சிகள் வரும் நிலையில், அதை நீக்க வேண்டும் அல்லது பிளர் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், டிரம்ப் தனது மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது போல இருக்கும். அதையும் குறைக்கச் சொல்லி இருக்கிறார்கள். அந்தளவுக்கு மோசமாக இருந்துள்ளது.

தனிக்கை அதிகாரி: இது தொடர்பாக சென்சார் போர்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேவையில்லாத கட்களை சொல்லவில்லை.. படத்தில் நிர்வாணக் காட்சிகளை எல்லா இடங்களிலும் நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். மேலும், டிரம்ப் அவரது அப்போதைய மனைவி இவானாவுடன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது போன்ற காட்சி இருக்கிறது. அதை 75 சதவீதம் குறைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால், இந்த காட்சி படத்தில் அடுத்து வரும் சீன்களுக்கு முக்கியமானது என்பதால் இதைக் குறைக்கப் படத்தின் இயக்குநர் ஒப்புக் கொள்ளவில்லை. இதுவே முக்கிய சிக்கல்" என்றார்.

இது தவிர கறுப்பினத்தவரை இழிவுபடுத்தும் வார்த்தையை நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். மேலும், மது மற்றும் புகை பிடிப்பது குறித்த எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்கச் சொல்லி இருக்கிறார்கள்.

என்ன சிக்கல்: சென்சார் போர்ட் இந்த படத்தில் சொன்ன மாற்றங்களைச் செய்யப் படத்தின் இயக்குநர் அலி அப்பாஸி சம்மதிக்கவில்லை. இந்தப் படத்தை இந்தியாவில் ரிலீஸ் செய்ய பிவிஆர் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் ஒரு ஊழியர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தன்னுடைய படத்தை யாரும் கட் செய்யக்கூடாது என்பதே அப்பாசியின் நிலைப்பாடு..

எப்படியாவது அவரை சம்மதிக்க வைத்து கட்களை செய்து ரிலீஸ் செய்யலாம் என நினைத்தோம். ஆனால், அவர் உறுதியாக இருக்கிறார். இந்த கட்கள் தனது படத்தைப் பாதிக்கும் என அவர் நம்புகிறார். படத்தை கட்களை செய்து வெளியிடுவதற்குப் பதிலாக இந்தியாவில் ரிலீஸ் செய்யாமலேயே இருப்பேன் என்கிறார் அவர்" என்றார். இதனால் டிரம்பின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கும் அந்தப் படம் இந்தியாவில் ரிலீஸ் ஆகாது என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+