தைவான் மீது படையெடுக்கும் சீனா? டிரம்ப்பிற்கு தகவல் வந்துடுச்சாம்.. கடைசியில் வைத்த ட்விஸ்ட்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க சீனா தைவான் இடையேயான பதற்றமும் மெல்ல அதிகரித்து வருகிறது. இது தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தால் நிலைமை மோசமாகும் என்று அஞ்சப்படும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இப்போது உலகெங்கும் பல்வேறு பகுதிகளிலும் புவிசார் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் ரஷ்யா மோதல், மத்திய கிழக்கு பதற்றம் என தொடர்ச்சியாக புவிசார் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது. இதுபோக சீனா தைவான் விவகாரம் கூட மெல்ல பெரிதாகி வருகிறது. இதனால் சீனா தைவான் இடையே கூட மோதல் வெடிக்காலம் என அஞ்சப்படுகிறது.

Donald Trump Claims Xi Jinping Assures No Taiwan Invasion During His Presidency

டிரம்ப் சொன்ன வார்த்தை

ஏற்கனவே பல்வேறு மோதல்கள் நிலவி வரும் சூழலில் சீனா தைவான் இடையே மோதல் ஏற்பட்டால் அது நிலைமையை மேலும் மோசமாக்கும். இருப்பினும், சீனா தைவான் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறார் அமெரிக்க அதிபர் டிரமப். தான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை தைவான் மீது படையெடுக்க மாட்டேன் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதியளித்ததாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், "சீன அதிபர் ஜி ஜின்பிங் தெளிவாக என்னிடம் சொன்னார்.. நான் அதிபராக இருக்கும் வரை இது (தைவான் மீது சீனா போரை ஆரம்பிப்பது) நடக்காது என்று நான் நம்புகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.. ஜின்பிங் என்னிடம், நீங்கள் அதிபராக இருக்கும் வரை நான் இதை ஒருபோதும் இதை செய்ய மாட்டேன் என்று கூறினார். சீனா இந்த விவகாரத்தில் மிகவும் பொறுமையாக இருப்பதாகவும் ஜின்பிங் என்னிடம் சொன்னார்" என்றார்.

அமெரிக்கா சீனா

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இந்த இரு தலைவர்களும் கடந்த ஜூன் மாதம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தொலைபேசியில் உரையாடினர். ஏப்ரல் மாதத்திலும் ஜி ஜின்பிங் தன்னுடன் பேசியதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த அழைப்பு எப்போது நிகழ்ந்தது என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உரையாடல் என்றால் அது ஜூன் மாதம் நடந்தது தான்.

சீனா தைவானை தனது பிராந்தியமாகக் கருதுகிறது. இப்போது தைவானில் ஜனநாயக முறையில் ஆட்சி நடந்தாலும் கூட அது தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிரது. தேவைப்பட்டால் படையெடுக்கவும் ரெடி என்பது போலவும் கூட சீனா முன்பு கூறியிருந்தது. இருப்பினும், சீனாவின் இறையாண்மை கோரிக்கைகளை தைவான் கடுமையாக எதிர்க்கிறது.

அமெரிக்கா தைவான் உறவு

மேலும், தைவானுக்கு அமெரிக்கா தான் முதன்மையான ஆயுத சப்ளையராகவும், சர்வதேச ஆதரவாளராகவும் இருக்கிறது. அதேநேரம் இன்னும் அமெரிக்கா தைவான் இடையே ராஜதந்திர உறவுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தைவானுக்கு ஆதரவாக எல்லா உதவிகளையும் அமெரிக்கா செய்தாலும் கூட இன்னும் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை என்பதை இதன் பொருளாகும்.

கடைசியில் ட்விஸ்ட்

கடந்த 1895ம் ஆண்டு ஜப்பான் தைவானை கைப்பற்றியது. சுமார் 50 ஆண்டுகள் ஜப்பான் ஆட்சியின் ஒரு அங்கமாக தைவான் இருந்தது. இருப்பினும், இரண்டாம் உலக போர் சமயத்தில் ஜப்பான் தைவானை விட்டு வெளியேறியது. 1943 கெய்ரோ பிரகடனத்தின்படி தைவானை ஜப்பான் சீனாவுக்கு திரும்ப அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும் இதனால் தைவான் தங்களுக்கே சொந்தம் என்பதே சீனாவின் வாதமாக இருக்கிறது.

மேலும் இது தொடர்பான கேள்விக்கு சீன செய்தித் தொடர்பாளர் ஜூ ஃபெங்லியன், "தைவான் ஏற்கனவே சீனாவின் ஒரு பகுதி தான்.. எனவே தைவான் மீது போரை ஆரம்பிக்க தேவை இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்க்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+