“நீ சிரிச்சு பார்த்ததே இல்லை” Epstein ஃபைல்ஸ் பற்றிய கேள்விக்கு பெண் ரிப்போர்ட்டரிடம் வழிந்த டிரம்ப்
வாஷிங்டன்: உலகம் முழுவதும் பாலியல் குற்றவாளியான, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்த விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படி இருக்கையில், இது தொடர்பான பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு, "நீ சிரிச்சு பார்த்ததே இல்லை" என டிரம்ப் பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுமிகளை கடத்தி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளி, அவர்களை உலகின் மிகவும் பிரபலமானவர்களுக்கு இரையாக்கியவர்தான் இந்த எப்ஸ்டீன். இவர் தொடர்பான ஆவணங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் டிரம்ப் தொடங்கி பல முக்கியஸ்தர்களின் பெயர்களும் இடம் பிடித்திருக்கின்றன. இந்த ஃபைல்ஸ் டிரம்ப்புக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசியருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓவல் அலுவலகத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்கள் குறித்து சிஎன்என் பெண் பத்திரிகையாளர் கெய்ட்லன் கொலின்ஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, டிரம்ப், "நீங்கள்தான் மிக மோசமான செய்தியாளர். நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை" என்றும் கூறினார்.
அதாவது, "என்னைப் பற்றி எதுவும் வெளிவராத நிலையில், நாடு வேறு விஷயங்களுக்குச் செல்ல வேண்டிய நேரம் இது என நான் நினைக்கிறேன். இது எப்ஸ்டீன் மற்றும் பிறரால் எனக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு சதி என்பதைத் தவிர, என்னைப் பற்றி எதுவும் வெளி வரவில்லை. இப்போது, சுகாதாரம் போன்ற மக்கள் அக்கறை கொள்ளும் பிற விஷயங்களில் நாடு கவனம் செலுத்த வேண்டும்" என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இருப்பினும், பத்திரிகையாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இதனால் டென்ஷனான டிரம்ப், "நீங்கள்தான் மிக மோசமான செய்தியாளர். உங்களைப் போன்றவர்களால் சிஎன்என்-க்கு டிஆர்பி இல்லை. உங்களை நான் சிரித்தே பார்த்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் முகத்தில் புன்னகையை நான் பார்த்ததில்லை. ஏன் சிரிக்கவில்லை தெரியுமா? உண்மை பேசவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினார்.
மேலும், "நீங்கள் மிகவும் மோசமானவர். மிக மோசமான நிருபரும் நீங்கள்தான். சிஎன்என்-க்கு உங்களைப் போன்றவர்களால் டிஆர்பி ஏன் இல்லை என்பது இதில் ஆச்சரியம் இல்லை!" என்று கோபமாக தெரிவித்தார். டிரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications