"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை குறித்து இப்போது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. அவர் பொதுவெளியில் தட்டுத்தடுமாறி நடப்பது.. உட்காரவே சிரமப்படுவது உள்ளிட்ட வீடியோக்கள் விவாதமாக மாறியுள்ளது. மேலும், அவரது கணுக்கால் வீங்கி இருப்பதாகவும், தோலின் நிறம் கூட மாறியுள்ளதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை எப்போதும் அதிபரின் உடல்நிலை குறித்து பேச்சுகள் இருந்து கொண்டே இருக்கும். தங்களை ஆளும் நபர், முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர் பிட்டாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கர்களின் எண்ணமாக இருக்கும். இதனால் அதிபர் பதவியில் இருப்பவரின் உடல்நிலை மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே அமெரிக்கர்கள் கருதுவார்கள்.

டிரம்ப் உடல்நிலை
இந்தச் சூழலில் டிரம்ப் உடல்நிலை குறித்த இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. 79 வயதான டிரம்ப் தான் அமெரிக்க வரலாற்றில் மிகவும் வயதான அதிபராவார். அங்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து டிரம்ப் இறங்கும் வீடியோ பெரிய விவாதமாகவே வெடித்துள்ளது. அந்த வீடியோவை பகிரும் பலரும் டிரம்ப் உடல்நிலை மோசமாக இருப்பதாகவே கூறி வருகிறார்கள். கடந்த மார்ச் 21ம் தேதி அன்று புளோரிடாவுக்கு வந்தபோது எடுக்கப்பட்ட இந்த வீடியோ அமெரிக்காவில் பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.
WATCH: Here’s Donald Trump getting off Air Force One to go golfing in Florida while the war in IRAN continues!
— Lucas Sanders 👊🏽🔥🇺🇸 (@LucasSa56947288) March 20, 2026
What do you notice here?
pic.twitter.com/xSvkkJR5Sx
தடுமாறும் டிரம்ப்
அந்த வீடியோவில் டிரம்ப் விமானத்தின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே இறங்குகிறார். விமானப் படிகளில் எச்சரிக்கையான வேகத்திலேயே இறங்குகிறார். தரையை அடையும் முன் நடுவிலேயே ஒரு கணம் நின்று நிதானிக்கிறார். இதைக் குறிப்பிட்டே சிலர் அவரது உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்னப்பா படி இறங்குவது எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.. ஆனால், அமெரிக்காவில் இதைத் தான் விஷயமாகவே பார்ப்பார்கள். அதிபர் படிகளில் எப்படி இறங்குகிறாரோ.. அதுவே அவரது உடல்நிலையின் அளவுகோலாகப் பார்ப்பார்கள். இதன் காரணமாகவே இப்போது இது விவாதமாக வெடித்துள்ளது.
உட்கார கூட முடியல
அதேநேரம் இந்த ஒரு சம்பவம் மட்டுமே டிரம்பின் உடல்நிலை குறித்து கேள்விகளை எழுப்பிவிடவில்லை. கடந்த மார்ச் 20ம் தேதி ஈரான் போருக்கு நடுவே டிரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றார். அப்போது தோற்றமும் நார்மலாக இல்லை என்ற பேச்சு எழுந்திருந்தது. அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பங்கேற்கச் சென்ற நிலையில், அதில் உட்காரும்போதே தடுமாறினார். மேசையை இரு கைகளாலும் பிடித்து மெல்ல சேரில் அமருகிறார். அப்போதும் கூட முழங்கால்களை மடக்கும்போது ரொம்பவே சிரமப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
இதுபோல அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் உடல்நிலை குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளது. சமீப மாதங்களாகவே டிரம்ப்பின் உடல் தோற்றம் மீதான விவாதம் இதுபோல அதிகரித்தே வருகிறது. வீங்கிய கணுக்கால், தோலின் நிற மாற்றம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் டிரம்ப் இந்த கருத்துகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டிரம்ப் மறுப்பு
அவர் மேலும் கூறுகையில், "எனது உடல்நிலை 100% சிறப்பாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் மாஜி வெள்ளை மாளிகை மருத்துவர் ரோனி ஜாக்சன் சொன்னதை நினைவுகூர விரும்புகிறேன். மிகவும் மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி என்று என்னைத் தான் ஜாக்சன் குறிப்பிட்டார். அதை யாரும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்" என்றார்.
நெட்டிசன்கள்
இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். இன்னொரு நபர், "டிரம்ப்பிற்கு வயதாகிவிட்டது.. அவரது மூளை குழம்பிவிட்டது.. இதன் காரணமாகவே அவர் தப்பான முடிவுகளை எடுத்து வருகிறார்" என்று பதிவிட்டுள்ளனர்.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி












Click it and Unblock the Notifications