கிரீன்லாந்து கனவுக்கு குறுக்கே வருவதா? இங்கிலாந்து, பிரான்ஸ்க்கு வரியை தீட்டிய அமெரிக்க அதிபர்ட் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் முயற்சிக்கு தடையாக இருக்கும் நாடுகள் மீது வர்த்தக வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்த நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக 10 சதவீத வரியை டிரம்ப் விதித்து அதிரடி காட்டியுள்ளார்.

டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமாக கிரீன்லாந்து உள்ளது. வட அமெரிக்க கண்டத்தின் ஒரு பகுதியாக உள்ள கிரீன்லாந்து, இயற்கை வளங்கள் நிறைந்ததாக உள்ளது. இதனால் இந்த தீவு மீது அமெரிக்காவுக்கு எப்பொதுமே ஒரு கண் இருந்தது வந்தது.

Donald Trump Hits Denmark UK France With 10 Tariffs Amid Greenland Row

தற்பொது அமெரிக்க அதிபராக இருக்கக் கூடிய டிரம்ப், கிரீன்லாந்தை கபளிகரம் செய்ய தீவிரம் காட்டி வருகிறார். ரஷ்யாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவைப்படுவதாக டிரம்ப் சொல்லி வருகிறார். டிரம்பின் இந்தக் கருத்துக்கு கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதிலும் டிரம்ப் தொடர்ந்து தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியே வருகிறார்.

டிரம்பின் இந்த முயற்சிக்கு நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், எரிச்சல் அடைந்த டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நாடுகள் மீது, வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து, அமெரிக்காவுக்கு தேவை என்றும், அவசியம் ஏற்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்தி கிரீன்லாந்தை இணைக்க தயங்க மாட்டேன் என்றும் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பியிருந்தார் டிரம்ப்.

இந்த நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க், பிரான்ஸ், மற்றும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும் என்று தெரிகிறது. டிரம்ப் அறிவித்துள்ள இந்த 10 சதவீத வரி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இது தொடர்பாக தனது ட்ரூத் வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- "கிரீன்லாந்தை முழுமையாக கைப்பற்றும் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஜூன் 1 ஆம் தேதி முதல் 25 சதவீதம் வரி விதிப்பு ஏற்படுத்தப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

கிரீன்லாந்து திட்டத்தை ஆதரிக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்பொவதாக டிரம்ப் எச்சரித்து இருந்த மறுநாளே இந்த அதிரடியை காட்டியுள்ளார் டிரம்ப். கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறுவது என்னவென்றால், இந்த விவகாரத்தில் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கிரீன்லாந்தில் தனது ராணுவ பலத்தை அதிகரிப்பதாக டென்மார்க் அண்மையில் தெரிவித்து இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+