'வரி' போர் தொடங்குதா? கனடா, சீனாவுக்கு எதிராக அதிரடி காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபராகி உள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறும் டிரம்ப், அதற்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்புகள் பல நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

america donald trump china

இறக்குமதி வரி விதிப்பு

குறிப்பாக அமெரிக்காவில் இருந்து ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. அவற்றை எல்லாம் மறு ஆய்வு செய்வதாக டிரம்ப் அறிவித்து இருக்கிறார். அதேபோல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அனைவரும் நாட்டை விட்டு எந்த பாரபட்சமும் இன்றி வெளியேற்றப்படுவார்கள் என்று கூறியுள்ளார். கனடா, மெக்சிகோ உள்ளிட்டவற்றின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான், மெக்சிகோ, கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதை நிறைவேற்றுவதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார். அதேபோல, சீனா மீது ஏற்கனவே வர்த்தக கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கும் 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை முதல் அமல்

சட்ட விரோத குடியேற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா விதித்த இந்த புதிய இறக்குமதி வரி, வர்த்தக போரை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. 2.1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஆண்டு வர்த்தகம் இதனால் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

டிரம்ப் விதித்த புதிய இறக்குமதி வரி வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வருவாயை பெருக்கும் விதமாக வரிகள் போடப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இறக்குமதி வரியை விதித்து அது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டு இருப்பதாவது:-

பதிலடி கொடுப்போம் என ரஷ்யா கருத்து

அமெரிக்கர்களை பாதுக்க வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. ஒரு அதிபராக இது எனது கடமை. எனது பிரசாரத்தின் போதே சட்ட விரோதமாக ஊடுருவுபவர்களையும், போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பேன் என உறுதியளித்தேன். எனக்கு அமெரிக்கர்கள் அதிகப்படியான ஆதரவு அளித்தார்கள்" என்று பதிவிட்டுள்ளார். டிரம்ப் புதிதாக விதித்த இறக்குமதியில் இருந்து எந்த விதி விலக்கும் கிடையாது எனவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று கனடாவும் மெக்சிகோவும் கூறியுள்ளன. எனினும், சீனா தற்போது வரை கருத்து தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+