உலகமே எதிர்பார்க்கும் டிரம்ப் பதவியேற்பு விழா! இன்று எப்போது தொடங்கும்? நேரலையில் எப்படி பார்க்கலாம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47ஆவது அதிபராக இன்று டிரம்ப் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கிறார். உலகமே எதிர்பார்க்கும் இந்த டிரம்பின் பதவியேற்பு விழா அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு எப்போது தொடங்கும்.. இந்தியாவில் உள்ளவர்கள் எப்படி நேரலையில் பார்க்கலாம் என்பது குறித்து நாம் இதில் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் இன்று ஜனவரி 20ம் தேதி அதிபராகப் பதவியேற்கிறார். அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் அவர் பதவியேற்கும் சூழலில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு விழா:
டிரம்பின் பதவியேற்பு நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. டிரம்ப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது, இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்ட அணிவகுப்பு உட்படப் பல நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. டொனால்ட் டிரம்புடன், துணை அதிபராக ஜே.டி.வான்ஸும் இன்று பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு விழா நிகழ்வுகள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டாவில் என்ற அரங்கில் நடைபெற உள்ளது. முதலில் நாடாளுமன்ற கட்டிட மைதானத்தில் திறந்தவெளியில் பதவியேற்பு விழா நடக்க இருந்தது. இருப்பினும், அங்கு கடும் குளிர் நிலவுவதால் திறந்தவெளி மைதானத்திற்குப் பதிலாக ரோட்டுண்டா அரங்கில் பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
எப்போது தொடங்கும்:
முதலில் நாளை உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு) இசை நிகழ்ச்சிகள் நடக்கும். சுமார் 2.30 மணி நேரம் இசை நிகழ்ச்சிகளும் மற்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதன் பிறகு உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்குத் தான் பதவியேற்பு விழா நடக்கும். அதாவது இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்குத் தொடங்குகிறது.
அமெரிக்க சட்டப்படி அதிபராகத் தேர்வாகும் நபரின் பதவிக்காலம் ஜனவரி 20ம் தேதி நண்பகல் முதலே தொடங்கும் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை ஜனவரி 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தால் மட்டுமே மறுநாள் ஜனவரி 21ம் தேதி நண்பகல் முதல் பதவிக்காலம் தொடங்கும். இதன் காரணமாகவே சரியாக ஜனவரி 20ம் தேதி நண்பகலில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
உலகமே எதிர்பார்க்கும் நிகழ்வு:
அதைத் தொடர்ந்து டிரம்ப் அங்குச் சிறப்புரையாற்றுவார். புதிதாக அதிபராகப் பதவியேற்கும் நபர் மக்களிடையே உரையாற்றுவது வழக்கமான நிகழ்வுதான். அடுத்த 4 ஆண்டுகள் அமெரிக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கும், என்ன பாலிசிக்களுக்கு அதிபர் முக்கியத்துவம் தரப் போகிறார் என்பதை விளக்குவதாக இந்த உரை இருக்கும். இதுதான் சர்வதேச அளவில் உற்றுக் கவனிக்கும் ஒன்றாக இருக்கும்.
இதற்குப் பிறகு ராணுவப் படைகள், பள்ளி இசைக்குழுக்கள், பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் அணிவகுப்பும் மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும் கடும் குளிர் காரணமாக இந்த அணிவகுப்பும் உள்ளரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள கேபிடல் ஒன் அரங்கில் இந்த அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அன்றைய தினம் 10க்கும் நிகழ்ச்சிகளில் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார். மறுநாள் பல்வேறு மதத்தினர் கலந்து கொள்ளும் சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் நடைபெறும் சூழலில், அத்துடன் பதவியேற்பு விழா நிறைவடைகிறது.
எப்படி நேரலையில் பார்க்கலாம்:
சரி விஷயத்திற்கு வருவோம்.. இந்த பதவியேற்பு விழாவை இந்தியாவில் உள்ளவர்கள் எப்படிப் பார்க்கலாம்.. அமெரிக்காவின் மேஜர் சேனல்களான என்பிசி, சிஎன்என், ஏபிசி, சிபிஎஸ், பாக்ஸ் நியூஸ் என அனைத்து சேனல்களும் பதவியேற்பு விழாவை நேரலையில் ஒளிபரப்ப உள்ளன. அதன் யூடியூப் பக்கங்களிலும் பதவியேற்ப விழாவை நேரலையில் பார்க்கலாம்.
அதேபோல வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம், அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றிலும் டிரம்ப் பதவியேற்பு விழா அதிகாரப்பூர்வமாக ஒளிபரப்பப்பட உள்ளது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications