நல்ல நேரமா என்ன? டிரம்ப் பதவியேற்பு விழா அமெரிக்க நேரப்படி சரியாக 12 மணிக்கு தொடங்க என்ன காரணம்!
வாஷிங்டன்: இன்று நடைபெறும் டிரம்பின் பதவியேற்பு விழா சரியாக உள்ளூர் நேரப்படி சரியாக 12 மணிக்கு நடைபெறுகிறது. அது ஏன் சரியாக உள்ளூர் நேரப்படி 12 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்குப் பின்னால் எதாவது காரணம் இருக்கா.. நம்ம ஊரில் நல்ல நேரம் பார்ப்பார்களா.. இதற்கு அதுபோல எதாவது காரணமாக இருக்குமா எனச் சந்தேகம் இருக்கும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், இன்னும் சற்று நேரத்தில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார். உள்ளூர் நேரப்படி சரியாக 12 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்.

அது ஏன் சரியாக 12 மணிக்குப் பதவியேற்கிறார்.. இதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று பலருக்கும் பல வித சந்தேகம் வரும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம். அதற்கு முன்பு முதலில் பதவியேற்பு விழா நாளில் என்ன நடக்கும் என்பது குறித்துச் சிறு தகவல்.!
என்ன நடக்கும்:
முதலில் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கே பாதுகாப்பு அதிகாரிகள் களத்திற்கு வந்துவிடுவார்கள். அரங்கிற்கு வரும் மக்களைப் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிப்பார்கள். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடக்கும். அதில் அதிபர் டிரம்ப்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் பங்கேற்பார்கள். அதைத் தொடர்ந்து உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இதர நிகழ்வுகள் தொடங்கும்.
உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி இரவு 8.30 மணி முதல் பதவியேற்பு விழா நடைபெறும் அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் மக்கள் வரத் தொடங்குவார்கள். காலை 11.30க்குள் (இந்திய நேரப்படி இரவு 10 மணி) அனைத்து விருந்தினர்களும் வந்தாக வேண்டும்.
சரியாக 12 மணிக்குப் பதவிப் பிரமாணம்:
சரியாக உள்ளூர் நேரப்படி 12 மணிக்கு (இந்திய நேரப்படி சரியாக 10.30) அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் தேர்வாவார். டிரம்ப் கடந்தாண்டு நவம்பர் மாதமே அதிபர் தேர்தலில் வென்றாலும் கூட, உள்ளூர் நேரப்படி 12 மணிக்கே அவர் அதிகாரப்பூர்வமாக அதிபர் பதவியை ஏற்பார். அப்போது தான் அதிபருக்கான அதிகாரம் அனைத்தும் அவருக்கு வரும்.
என்ன காரணம்:
அது ஏன் சரியாக 12 மணி.. நம்ம ஊரைப் போல நல்ல நேரம் எதாவது பார்க்கிறார்களோ என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், அதற்குக் காரணமே வேற. அமெரிக்காவின் சட்டம் ஒருவர் எப்போது அதிபராகப் பதவியேற்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதிகாரம் கைமாறும் போது எந்தவொரு குழப்பமும் வரக்கூடாது என்பதற்காகவே இந்தளவுக்குத் தெளிவாக விதிகள் வரையறுக்கப்பட்டது.
1937ம் ஆண்டுக்கு முன்பு வரை தேர்தலுக்கு மறு ஆண்டு மார்ச் 4ம் தேதி அதிபர் பதவியேற்பு விழா நடக்கும். ஆனால், தேர்தலுக்கும் பதவியேற்பிற்கும் இடையே நான்கு மாதங்களுக்கு மேல் கேப் இருப்பதால், பதவியேற்பு விழாவை ஜனவரி 20ம் தேதி நடத்தும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த 20ஆவது சட்டத் திருத்தத்தின்படி ஒருவேளை ஜனவரி 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தால், மறுநாள் ஜனவரி 21ல் பதவியேற்பு விழா நடக்க வேண்டும்.
சட்டம் சொல்வது என்ன:
இந்த 20வது திருத்தம் பழைய அதிபரிடம் இருந்து தேர்தலில் வென்ற நபருக்கு எத்தனை மணிக்கு அதிகாரம் கைமாறும், அவருக்கு எப்போது முழு அதிகாரமும் வரும் என்பது கூட துல்லியமாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 20ம் தேதி நண்பகல் முதலே அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கிறார். அதற்கு முன்பே பதவிப் பிரமாணம் செய்திருந்தாலும் சரியாக உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்குத் தான் அவருக்கு அதிபருக்கான அதிகாரம் வரும்.
இதன் காரணமாகவே எப்போதும் பதவியேற்பு விழா நாளில் மதியம் 12 மணியளவில் பதவிப் பிரமாணம் எடுப்பது போலத் திட்டமிடப்படும். டிரம்ப் பதவியேற்பு விழா என்று இல்லை. கடந்த காலங்களில் நடந்த பதவியேற்பு விழாக்களும் கூட சரியாக 12 மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுப்பது போலவே திட்டமிட்டு இருந்தது.
அதாவது அந்நாட்டின் சட்டம் அதிபருக்கான அதிகாரம் நண்பகலில் தான் புதிய அதிபருக்கு வருவதாகத் தெளிவாக கூறியுள்ளதாலேயே சரியாக 12 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications