"இந்தியாவை விட வேறு யாரும் எங்களுக்கு முக்கியமில்லை" சீக்கிரமே இந்தியா வரும் டிரம்ப்! எல்லாம் மாறுதே
டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான கருத்து வேறுபாடுகள் சீக்கிரமே முடிவுக்கு வருவது போலத் தோன்றுகிறது. அமெரிக்காவின் மிக அத்தியாவசியமான ஒரு நாடு இந்தியா எனக் குறிப்பிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதர் செர்ஜியோ கோர், இந்தியா- அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகை குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கடந்தாண்டு முதலே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது. இதனால் இந்திய வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் போகும் சரக்குகள் கடுமையாகக் குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கூட தொடர்ச்சியாக இந்தியா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறி வருகிறார்.

மாற்றம்
ஆனால், இப்போது அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ள கருத்துகள் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவை விட வேறு எந்தவொரு நாடும் அத்தியாவசியமானது இல்லை என்று செர்ஜியோ கோர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இன்று செவ்வாய்க்கிழமை முதல் இந்தியா அமெரிக்கா இடையேயான அடுத்த சுற்று வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார். இது மட்டுமின்றி மிக முக்கியமாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டுக்குள் இந்தியா வரக்கூடும் எனவும் கோர் கூறினார்.இந்த செர்ஜியோ கோர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் தூதரகத்தின் சிறப்புத் தூதராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்தியா - அமெரிக்கா உறவு
டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பேசிய கோர், "அமெரிக்காவும் இந்தியாவும் பொதுவான நலன்களுக்காக மட்டும் இணைந்து செயல்படுவதில்லை. உயர்மட்ட உறவாலும் பிணைக்கப்பட்டுள்ளன. உண்மையான நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுவது சகஜம் தான். ஆனால், இறுதியில் கருத்து வேறுபாடுகளை நண்பர்கள் எப்போதும் பேசி தீர்த்துக்கொள்வார்கள்.
வர்த்தகப் பேச்சுவார்த்தை
வர்த்தகம் குறித்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை (இன்று) நடைபெறும். இந்தியா உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. எனவே, எந்தவொரு விஷயத்திலும் எளிதாக ஒப்பந்தம் போட்டுவிட முடியாது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. வர்த்தகம் என்பது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதைத் தாண்டிப் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, எனர்ஜி, தொழில்நுட்பம், கல்வி, ஹெல்த் எனப் பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகிறது.
நான் அதிபர் டிரம்ப்புடன் பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிபர் டிரம்ப்பின் நட்பு உண்மையானது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியாவை விட எங்களுக்கு அத்தியாவசியமான நாடு வேறு எதுவும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
டிரம்ப் இந்தியா வருகை
அதிபர் டிரம்ப்பின் இந்திய வருகை குறித்துப் பேசிய கோர், "இது உலகின் பழமையான, மிகப் பெரிய ஜனநாயகங்களுக்கு இடையே நடைபெறும் சந்திப்பு. டிரம்ப்புடன் நான் கடைசியாக டின்னர் சாப்பிட்டபோது அவர் தனது இந்தியா பயணம் குறித்து நினைவு கூர்ந்தார். ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர் மீண்டும் இந்தியா வருவார் என நம்புகிறேன்.












Click it and Unblock the Notifications