டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது நல்ல நண்பர் என்று குறிப்பிட்டு, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைகள் நிலவி வரும் சூழலில், டிரம்பின் இந்த கருத்து உலக அரங்கில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்தியா - அமெரிக்கா இடையே நல்உறவு இருந்து வந்தது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக பதவியேற்றதும் அந்த நிலை மாறியது. இந்தியா மீது ஏராளமான வரிச்சுமைகளை விதித்தார். சமீப காலமாக மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஏற்கனவே வரியை குறைத்துள்ள நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். காரணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும். மோடி என்னுடைய நல்ல நண்பர்கள். நீண்ட காலமாக எங்களுக்குள் நல்ல நட்பு தொடர்கிறது.
அதனால் வாஷிங்டன் - டெல்லி இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக அமெரிக்கா மூலம் இந்தியா நன்கு பயனடைந்து வருகிறது. நமது கொள்கைகள் மூலம் அவர்கள் பயனடைந்தாலும் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இந்தியா மூலம் அமெரிக்கா நிறைய பணம் சம்பாதிக்க தொடங்கியுள்ளது" என்று கூறியுள்ளார்.
இலக்கு நிர்ணயிப்பு
டிரம்பின் இந்த கருத்து சர்வதேச அரங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில், சுங்க வரி குறைப்பு, அமெரிக்க சந்தையில் இந்திய பொருட்களுக்கு அதிக அணுகல், வேளாண் மற்றும் தொழில்துறை பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள், முதலீட்டு வாய்ப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. இரு நாடுகளும் 2030-ஆம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications