"நானே நேரடியா வரேன்.." டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு! ஈரான் விவகாரத்தில் உற்று பார்க்கும் உலக நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்கா ஈரான் இடையேயான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், அமெரிக்கா இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. ஈரான் உடனான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது.
மத்தியக் கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. அங்கு ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, ஈரானை நோக்கி விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பி இருந்தது. இதற்கிடையே இப்போது அமெரிக்காவின் இரண்டாவது விமானந்தாங்கி கப்பலும் ஈரான் அருகே அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அங்குப் பதற்றம் அதிகரித்துள்ளது.

மார்கோ ரூபியோ
இதற்கிடையே ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சில முக்கிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவதாக ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வாய்ப்பு கிடைத்தால் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நேரடியாகச் சந்திக்கவும் கூட அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகத்திடம் பேசிய ரூபியோ, சர்வதேச மோதல்களை எப்படித் தீர்க்கலாம் என்பது குறித்து டிரம்ப் தொடர்ந்து ஆலோசனை நடத்துவதாகத் தெரிவித்தார். மேலும், எதிரிகளை நேரடியாகச் சந்திப்பது பிரச்சினையைத் தீர்க்கத் தானே தவிர, இந்தச் சந்திப்பு நடப்பதாலேயே டிரம்ப்பை பலவீனமாகக் கருதிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப் தயார்
இது தொடர்பாக ரூபியோ மேலும் கூறுகையில், "பிரச்சினைகளைத் தீர்க்க நமது அதிபர் யாரையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார். அயதுல்லா கமேனியை கூட நேரில் சந்திக்க டிரம்ப் தயாராகவே இருக்கிறார். இதை நான் மிகவும் உறுதியாகக் கூறுவேன். மீட்டிங்கிற்கு ரெடி என்பதாலேயே அயதுல்லா சொல்வதை டிரம்ப் ஏற்கிறார் என்று பொருள் இல்லை. மாறாக உலகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி அது என்று டிரம்ப் கருதுவதால் அவர் எதற்கும் தயாராகவே இருக்கிறார்" என்றார்.
ராணுவம் குவிக்கப்பட்டது ஏன்
ஈரானைச் சுற்றிலும் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் ரூபியோ இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என தெரிவித்த ரூபியோ, ஈரானின் தாக்குதல்களைத் தடுக்கவே அமெரிக்கப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.. கடந்த காலங்களில் அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய ரூபியோ, மீண்டும் அதுபோன்ற முயற்சிகளைத் தடுக்கவே அமெரிக்கப் படைகள் அங்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும், "ஈரான் வசம் அணு ஆயுதங்கள் செல்லக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்ய இது அவசியம். ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்ட டிரம்ப் உறுதியாக இருக்கிறார். டிரம்ப் எப்போதுமே பிரச்சனைகளை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரவே விரும்புவார்" என்றார்.
சீனா
கனடா பிரதமர் மார்க் கார்னி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் சமீபத்தில் சீனா சென்றிருந்தனர். அமெரிக்க நேச நாடுகள் சீனாவுடன் நெருங்குவது குறித்த கேள்விக்கு ரூபியோ, "இவை டிரம்ப்பின் பலவீனத்தைக் காட்டவில்லை. உலக நாடுகளுக்கு இடையே ராஜதந்திர உறவுகள் இயல்பானவை, அவசியமானவை! எனவே, இதைப் பிரச்சினைகளாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
-
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்.. விமானிகளின் நிலை என்ன? ஷாக் தகவல்! -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
இதுக்கு ஒரு எண்டே கிடையாதா.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போர் இந்திய இழந்தது என்ன..? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு!










Click it and Unblock the Notifications