நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ
வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் சில மர்மமான வீடியோக்களை பதிவிட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது நாளை ஏதோ மிகப் பெரிய அறிவிப்பு வரப் போவது போலத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் மோதல் 4வது வாரமாகத் தொடர்கிறது. தற்போதைய சூழலில் போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இதனால் சர்வதேச அளவிலும் கூட பல்வேறு பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

சர்ச்சை பதிவு
இதற்கிடையே வெள்ளை மாளிகை அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் சில மர்மமான வீடியோக்களையும், தெளிவாகத் தெரியாத வகையில் வேண்டும் என்றே பிக்சலேட்டட் செய்யப்பட்ட சில படங்களையும் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்ற இது யூகங்களைத் தூண்டியுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு வீடியோவில் 'சைலன்ஸ்' எமோஜி இடம் பெற்றுள்ளது. அதை ரிவைர்ஸில் ப்ளே செய்தால், "நாளை ஒரு முக்கியமான அறிவிப்பு" என்று கேட்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இந்த போஸ்ட்கள் கொஞ்ச நேரத்திலேயே பல லட்சம் வியூஸ்களையும் ரிட்வீட்களையும் பெற்றுள்ளன. அமெரிக்கா- ஈரான் மோதலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த போஸ்ட்கள் வந்துள்ளன. இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிவரும் நிலையில், ஈரான் அதிகாரிகள் இதை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது..
போஸ்ட்கள் டெலிட்
இந்த வீடியோ வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிடப்பட்டது. இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே அது நீக்கப்பட்டது. இருப்பினும், டெலிட் செய்வதற்குள் சிலர் அதை டவுன்லோடு செய்து வைத்திருந்ததால் அது இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஒரு வீடியோவில் செல்போனில் எடுக்கப்பட்டது போன்ற வீடியோ இருக்கிறது. இதில் தரை தான் தெரிகிறது. பெண்ணின் கருப்பு ஷூ அதில் தெரிகிறது. அதில், "சூப்பர். சீக்கிரமே அறிவிப்பு வருகிறது தானே?" என்று கேட்கிறார். அதற்கு ஆண் குரலில் ஒருவர், "ஆம் நிச்சயம் வருகிறது" என்று சொல்கிறார். இப்படி அந்த வீடியோ முழுக்கவே மர்மமாகவே இருக்கிறது.
மர்மம்
அதேபோல இன்னொரு வீடியோவில் கருப்பு திரை முதலில் தெரிகிறது. பிறகு வெள்ளை மாளிகை தோன்றும் சூழலில், ஸ்கிரீனில் அப்போது "அதிபர் டொனால்ட் ஜே. ட்ரம்ப்" என்ற பெயர் வருகிறது.. அதில் ஏதோ தெளிவற்ற குரல் உளறுவது போல இருக்கிறது. ஆனால், அந்த ஆடியோவை ரிவர்ஸில் போட்டுக் கேட்டால் "நாளை ஒரு முக்கியமான அறிவிப்பு" என்ற வாசகம் கேட்பதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகிறார்கள். இத மட்டுமின்றி 3 பிக்சலே்ட ஆன தெளிவற்ற போட்டோக்களும் பதிவிடப்பட்டன. அதில் இரண்டு டிரம்ப்பையும் ஒன்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் காட்டுவதாகத் தெரிகிறது.
இதன் மூலம் வெள்ளை மாளிகை அல்லது டிரம்ப் தரப்பு என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெளிவாகப் புரியாமலேயே இருக்கிறது. ஈரானின் மின் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். மேலும், ஈரான் தரப்பு விரிவான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வாரம் முழுக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் மறுப்பு
ஆனால், ஈரான் அதிகாரிகள் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களைத் திட்டவட்டமாக மறுக்கிறார்கள். அதுபோல எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றே அவர்கள் சொல்லி வருகிறார்கள். பேச்சுவார்த்தை இல்லை என ஈரான் சொல்வதையே ஏற்க மறுக்கும் டிரம்ப், ஈரான் சார்பில் பேசும் அதிகாரிகள் மிகவும் வித்தியாசமானவர்கள் என விநோத விளக்கத்தைக் கொடுக்கிறார்.
டிரம்ப் என்ன தான் தாக்குதலை நிறுத்துகிறேன் அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் சொன்னாலும் கூட இன்னொரு பக்கம் அமெரிக்க வீரர்கள் மத்திய கிழக்கில் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்றே தெரியாத சூழலே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வந்த இந்த போஸ்ட்க்ள் சர்ச்சையாக வெடித்துள்ளன.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications